பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 95

யோசித்து இதற்கு தக்க சமாதானம் கொடுப்பவர். ஸ்ரீலஸ்ரீ க. அயோத்திதாஸ கவிராஜ பண்டித சிகாமணி அவர்களால் தான் முடியும் என்று முற்றிலும் நம்பிவிட்டேன். ஆகையினால் இச்சங்கையைப்பற்றி இவ்வடிமைக்கு தமிழன் பத்திரிகை வாயிலாக சமாதானம் அளிப்பீரென்று முழு நம்பிக்கையோடு இதை சமர்ப்பிக்கலானேன்.

ஐ. முனிசாமி, பெங்களூர் .

விடை : அன்பரே, தாம் வினாவிய சங்கை விசேஷித்ததே ஆயினுந் தாங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தொன்றுண்டு. அவை யாதென்னிலோ பெளத்ததன்மம் உன்பூட்டன் எழுதி வைத்திருப்பினும் உன் பாட்டன் எழுதி வைத்திருப்பினும் அவற்றை யுன் விசாரிணையிலும் அனுபவத்திலும் உசாவிப்பார். அவை மெய்யாயதேயென்று தெளிந்து உமக்கும் உமது சந்ததியோருக்கும் உன் கிராமவாசிகளுக்கும் உன் தேசத்தோருக்கும் சுகமளிக்கக் கூடியதாயின் அவற்றை நம்பு. உன் விசாரிணைக்கும் உன் அநுபவத் திற்கும் பயனற்றதாயின் விட்டுவிடுமென்று கூறுவதாகும். அது கண்டே அவற்றிற்கு புத்ததன்மமென்றும் மெய்யறமென்றும் வகுத்துள்ளார்கள்.
மற்றய மதத்தோர் அவர்களுக்குள் எழுதி வைத்திருப்பதையும் சொல்லுவதையும் நம்பி நடப்பதே இயல்பும் மதப்பிடிவாதமே செயலுமாக நிற்பர். ஆதலின் உமக்கஃது எதிரடையாகவே விளங்கும்.
உமது பெளத்ததன்மக் கொள்கையோ நற்கருமத்தைச் செய்யில் நல்ல பலனுந் துற்கருமத்தைச் செய்யின் தீயபயனுமுண்டு அவற்றை அனுபவத்திலுங் காட்சியிலும் அறிந்துக்கொள்ளற்கு தோற்றும் பிறவிகளே போதுஞ் சான்றென்று கூறி நற்கருமத்தையே பெருக்கி துற்கருமம் யாவும் அகலுமாயின் பிறவியற்று நித்தியானந்த மோட்சநிலை பெறுவதாகும். தாம் கூறியுள்ள இரு மதத்தவர்களது கொள்கையோவென்னில் தாங்களேது தீங்கானச் செயல்களைச் செய்யினுந் தங்கள் தேவனை வேண்டிக்கொண்டால் போது மென்னும் பரிகாரமும், தங்கள் தங்கள் தீவினைக்குத்தக்கத் துன்பம் நேரிட்டு விடுமாயின் பியூனுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் இலஞ்சமென்னும் பரிதானங் கொடுப்பதுபோல அவர்கள் தேவதைகளுக்கு காணிக்கை என்னும் இலஞ்சப் பரிகாரமே போதுமென்னுந் திருப்தியிலிருக்கின்றார்களன்றி அந்தந்த மதப்போதர்களின் பொருட்களை முற்றுமாறாய்வாரில்லை அவை யாதென்னிலோ ஒருவரது சுவிசேஷத்தில் மோட்சத்திற்குப்போகும் வழி ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதுபோலென்றும் மற்றொருவர் (மகிருபத்தில் அனலக்) என்றும் கூறியுள்ளவைகளேயாம்.
இதனந்தரார்த்தங்களை அறியாதோர் தங்கடங்கள் மதவைராக்கியங்களிலிருந்து கொண்டு தங்கள் முடிவைத் தெரிந்துகொள்ளாது, உலக முடிவை சொல்லிக்கொண்டே அவர்கள் மடிவதியல்பாம். விசாரிணையற்று சொன்னதைச் சொல்லித்திரியும் கிள்ளைபோன்றோர்பால் தாம் வாதிடுவது உமி குத்திகை சலிப்பது போலாம். தாம் வாசஞ்செய்யும் பெங்களூர் தண்டென்னுங் கண்டோன்மென்டில் இறந்துள்ளவர்களை மட்டிலும் எழுப்புவதாயின் பெங்களூர் முழுவதும் இடந்தருமாவென்று யூகித்து உலக முழுவதிலும் இறந்தோர் தொகை என்னவாகும். எவ்விடங் கொள்ளு மென்பதை எளிதிலறிந்துக் கொள்ளலாம். இத்தகைய பெருந்தொகை மக்களை மீளா அதோகதியாய நரகத்திலும் அதோகதியாய மோட்சத்திலுஞ் சேர்க்கும்படியான தேவனை நீதியுள்ள தேவனென்பரோ அன்றேல் அநீதியுள்ள தேவனென்பரோ அஃது அவர்களுக்கே உரிய தாம். தாம் மலைவு கொள்ளற்க.

- 7:23; நவம்பர் 12, 1913 -
 

123. மோட்சமென்னும் மொழிமுதற் பொருளும் மோட்சத்திற்குப் போகும் வழியும்

நிப்பானமென்பது மகட பாஷையும், மோட்சமென்பது சகடபாஷையும், முத்தியென்பது திராவிட பாஷையுமேயாம். இவற்றுள் நிப்பான