பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

மென்பதையே நிருவாணமென்னப்படும். மனிதனுக்குள் சகல பாசபந்த பற்றுக்களுள்ளவரையில் வாணமென்றும், பற்றுக்களற்றவிடத்து நிருவாணமென்றுங் கூறப்படும். மனிதனுக்குள் சகல துக்கங்களும் நிறைந்திருக்கும் வரையில் நிரயம், நரகமென்றும் துக்கங்கள் யாவும் அகன்ற விடத்து மோட்சமென்றுங் கூறப்படும், மனிதன் மிருகச்செயல் கொண்டு சுயக்கியானமற்று கிள்ளை போல் அஞ்ஞான முற்றிருக்கும் வரையில் மழலை என்றும் மனிதச் செயலுற்று சுயக்கியானமுற்று ஞானமுதிற்சி பெற்றபோது முத்தியென்றுங் கூறப்படும்.
நிப்பானம், மோட்சம், முத்தியென வழங்கும் மொழிகளுடன் கைலாயம், வைகுந்தமென்னுங் கற்பனா மொழிகள் கலந்திருப்பினும் மோட்ச மென்னுமொழியையே பெரும்பாலும் வழங்கி வருகின்றார்கள். அம்மோட்சமென்பது ஓர் பொருளுமன்று கட்டிடமுமின்றாம். அகண்டத்தை தெய்வ உலகமென்றும் வானவர்களென்றும் வானராட்சியமென்றும் புத்தர்களென்றும் புத்தேளுலகமென்றுங் கூறப்படும். இத்தகைய மோட்சத்திற்கு செல்ல வேண்டிய வழியோவென்றால் இராகத்துவேஷ மோகங்களென்னுங் காம வெகுளி மயக்கமாம் கோபமென்னு மக்கினியும் காமமென்னு மக்கினியும் எரிந்துகொண்டேயிருப்பதும் பொறாமெய் லோபமென்னும் அக்கினியாvறோடிக்கொண்டேயிருப்பதும் பேராசை பேருண்டி என்னுங் குப்பைகள் வளர்ந்துக்கொண்டேயிருப்பதும், குடி, களவு, கொலை, வியபசாரம், பொய் முதலிய முட்காடுகளடர்ந்து இருப்பதேயாம். இத்தகையாய தடைகளை சாந்தம், அன்பு, ஈகை என்னும் ஆயுதங்களால் தணித்தும் அகற்றியும் வழியுண்டாக்கி நித்தியானந்தம் நித்திய சுகம், நித்திய வாழ்க்கைப் பெருவதேயாம். இப்பேரானந்த நிலைக்கே நிப்பானமென்றும் மோட்சமென்றும் முத்தியென்றும் பெயர். அந்நிலை பெற்றோர்களே கடவுளர்களென்றும் ஈசர்களென்றும் ஞானிகளென்றும் அழைக்கப் பெற்றார்கள். நான்குவகை யோனி எழுவகை தோற்றங்களில் இவர்களே சிறந்தவர்களென்னப்படும். இப்பேரானந்த சிறப்பு எவற்றால் பெற்றார் களென்னில் பலவகை துக்கங்களாலும் பிணிகளாலும் வாதையுற்று மரண மடைந்தானென்னும் பாபத்தின் சம்பளத்தைப் பெறாமலும் மாளாபிறவியிற் சுழன்று தீரா துக்கமென்னும் நிரயத்தில் வீழாமலும், புண்ணியத்தின் சம்பளம் பெற்று சதா சுக நித்திய சீவிகளானது கொண்டாம்.
தோற்றும் உருக்களில் தேவரெனத் தோற்றிய ஏழாவது தோற்றத்தோர் புளியம் பழமும், ஓடுபோலும், புழுவும் விட்டில் போலும், சுயஞ் சோதியாக மாற்றிப் பிறந்துப் பரிநிருவாணமுற்று அகண்டத்துலாவுகின்றார்கள். இதுவே சத்தியம் சாத்தியமேயாம். இத்தகையாய துக்கச் செயலை ஆதியில் ஆய்ந்து கண்டவரும் அத்துக்க நிவர்த்தி அடைந்தவரும் உலகெங்கும் அப்பேரானந்த ஞானவிளக்கை ஏற்றியவரும் ஜகத்திற்கே குருவாக விளங்கியவரும் ஆதிதேவன், ஆதியங்கடவுள், ஆதிபகவன், ஆதிசிவன், ஆதியீசன் ஆதிபரமனெனக் கொண்டாடப் பெற்றவருமாகிய சித்தார்த்தி சக்கிரவர்த்தியாக தோன்றிய புத்தபிரானே ஆதலின் நமது மனமொழி மெய்களால் புத்தரையும் அவரது தன்மத்தையும் அவரது சங்கத்தையும் இடைவிடாது சிந்தித்து ஈடேறுவோமாக.

- 7:31; சனவரி 7, 1914 –
 

124. சர்வவியாபியில் தோன்றிய எம்.பி. மாஸ்கிரேனியஸ்

என்னுமன்பரே தேம்பாவணியையுந் தொன்னூலையுந் தாங்கள் சிறப்பித்தெழுதியுள்ளது கண்டு தாம் கலை நூற்களோடு பல நூற்களுமாய்ந்துள்ளீரென்னு மவாவின் மிகுதியாலச் சங்கைகளை விடுத்தோமன்றி தடியெடுத்து தலையிலடிப்போர் சங்கத்தைச் சார்ந்தவரென்றறிந்திருப்போ மேலச் சங்கையை நமது பத்திரிகையில் வரைந்திருக்கமாட்டோம். ஆயினும் கூடிய சீக்கிரம் "பண்டை நூற் சேகர சங்கத்" தோரால், தேவபாணியும், தொன்னூலும் அச்சிட்டு வெளிவரும். அப்போது அவைகள் யாருடைய