பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

நானித்தேசத்தில் பெரும்பாலும் மூலிகை வர்க்கங்களை கையாடி வருகின்றேனன்றி இரச பாஷாணங்களைக் கையாடுவது கிடையாது. ஆயினும் வைத்தியர்களுக்கு அவைகள் தெரிந்திருக்க வேண்டியது முக்கிய மாதலால் தங்களாலவைகளைத் தெரிவிக்கக் கூடுமென்னுந் திட சித்தத்தால் இக் கடிதமெழுதலானேன். அவற்றைப் பயிரங்கமாக பத்திரிகையிலெழுத மனமிராவிடினும் கடிதத்திலேனு மெழுதி என்பரிகாரச் செயலை விருத்தி செய்யவேண்டும்.

வீ. முனியாண்டி பரிகாரி, திருவனந்தபுரம்.

விடை : வைத்தியனாக வெளிவந்தபோது அதற்காய மூலிகை குணா குணங்களையும் உபரச குணாகுணங்களையும் பாஷாண குணா குணங்களையும் ஆய்ந்து செய்யவேண்டியதேயழகாம். வைத்திய நூற்கள் யாவும் ஆதியில் பௌத்தர்களாலேயே வரைந்து வைத்துள்ளவைகளாகும். அவ்வகைக் கருணைகொண்டு அவர்களெழுதியவையாவும் சகல மனுக்களுக்கும் உபயோகமாகும் பொருட்டு எழுதிவைத்துள்ளாரன்றி மூடுமந்திர மொன்றுங் கிடையாவாம்.
அத்தகைய உபகாரமாய சங்கையைப் பலருக்கும் உபகாரமாகப் பத்திரிகையில் வரைவதே பெரும்பயனாதலின் இவ்விடம் வரையலானோம். தாம் மூலிகை வர்க்கங்களையே பெரும்பாலும் கையாடுகிறேன், பாஷாண வர்க்கங் கிடையாதென வரைந்துள்ளவை மிக்க வியப்பாகவிருக்கின்றது. ஏனென்பீரேல் மூலிகைகளினிடத்தும் விஷமுண்டு அவைகளையுமாய்ந்து செய்ய வேண்டியதே வைத்தியர்கள் செயலாம்.
அதாவது எள்ளு, முருங்கைவேர், இஞ்சி, சுக்கு, முன்னைவேர், வில்வவேர், பாதிரிவேர், இவைகளின் மேல் தோல்விஷம், உள்ளுருவை மருந்திற்கு உபயோகிக்கலாம், சித்திர மூலத்தின் உள்வேர் விஷம் மேல்பட்டையை மருந்துகளுக்கு உபயோகிக்கலாம், அலரியின் வேர், மேற்றோல் உள்ளும் புறமும் விஷமாம், தான்றிக்காய் மேல்தோல் மருந்துக்கு உபயோகிக்கலாம் அதனுட்கொட்டை விஷமாம்.
முறிவுகளை விளக்குவாம். பாஷாணங்களில் கௌரி, தொட்டி, வெள்ளை தீமிரிக்கு முதலியவை தனி விஷங்களாகும். வீரம், பூரம், இலிங்க முதலியவை இரசபாஷாண சம்பந்த முடையதாகும். இவற்றுள் கௌரி, தொட்டி, வெள்ளை, தீமுரிக்கு முதலிய பாஷாணங்களுக்கு பச்சைக் கடலை அல்லது அவுரி வேர், மிளகு, இவைகளிலொன்றைக் கியாழமிட்டுக் கொடுத்து வர முறிந்துபோகும். கோழி முட்டையின் வெள்ளைக் கருவை மட்டிலுமோர் பாத்திரத்திலிட்டு சிறு குச்சிகள் கொண்டு நன்றாய் சிலுப்பி பசும்பாலில் கலந்து குடுத்துவர முறியும். வீரம், பூரம், இலிங்க முதலியரச பாஷாணங்களுக்கு, நெல்லிகந்தகத்தை வெண்ணெயிலிழைத்துக் கொடுப்பதே முக்கிய முறிவாயினும் இளநீர் வழுக்கையை வுள்ளுக்குக் கொடுத்து வருவது மிக்க சுகமாம்.
அலரிக்கு - கடுக்காய் கியாழமுறிவு, எருக்கஞ்செடி, அதன்பால், வேருக்கு எள்ளுஞ் சருக்கரையு முறிவு, எட்டிக்கு, நாவல் பட்டை அதாவது நாகப்பட்டைரச முறிவு, கள்ளிக்கு ஆவாரம்பட்டைக் கியாழமுறிவு, வெண் நாபிக்கு தான்றிக்காய் கியாழமுறிவு, ஊமத்தைக்கு தாமரைக்கிழங்கு முறிவு, சுண்ணாம்பிற்கு மாங்கொட்டைப் பருப்பு அல்லது மஞ்சள் முறிவு, குன்றிவேருக்கு வெண்கார முறிவு, நேர்வாளம் அல்லது நேபாளவித்து, னந்தி விதை யென வழங்கும் பேதிவிதைக்கு வசம்பு முறிவு, நல்லெண்ணெய்க்கு முற்றின தேங்காய்ப் பால் முறிவு, சருக்கரைக்கு விலாமிச்சவேர் முறிவு, வாழைப்பழத்திற்கு சுக்குக் கியாழ முறிவு, பலாபழத்திற்கு நெய்யும் இள வெந்நீரும் முறிவு, மாங்காயிற்குத் தேங்காய்பால் முறிவு, இவைகள் யாவையும் சற்றாய்ந்து மனுக்களது தேகபலம் மருந்து பலமறிந்து செய்வதே வைத்தியர்க்கழகாம். ஏனென்பீரேல் வியாதியஸ்த்தன் தனக்குண்டாய பிணியின் உபத்திரவத்தைச் சகிக்கவியலாது வைத்தியனையோர் தெய்வம் போலெண்ணி தேகத்தை வொப்பிவிக்கின்றான் அவனுக்குள்ள வியாதிக்குத் தகுதியாக மருந்தைக்