பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 103

கொடுத்து சுகஞ் செய்யாவிட்டாலும் பெரிதல்ல. அவனுக்கின்னும் வியாதியதிகரித்து துன்பப்படும்படியான மருந்துகளைக் கொடுத்து விடுவதாயின் அத்தீவினை வைத்தியனையே சார்ந்து கெடுப்பதுடன் அவனது தன்மச் செயலுக்கு மாறு பெயருண்டாகிப்போம் ஆதலின் கன்ம காண்டமாய்ந்து கருத்துடன் வைத்தியஞ் செய்ய வேண்டியதேயாம். பணத்தாசையால் பலமருந்துகளைக் கொடுத்துக் கெடுப்பதால் தனக்குத் தீவினைதோன்றி கெடுவதுடன் பூர்வவைத்திய சிறப்புங் குன்றிப்போம் தெரிந்து செய்க.

-7:45; ஏப்ர ல் 15, 1914 -
 

131. மனுதன்ம சாஸ்திரம்

அதாவது மனுதன்ம சாஸ்திரமென்னும் ஒரு புத்தகமிருக்க அதை யான் வாசித்ததில், யாதொருமொரு சூத்திரன் மோட்சம் பெறவேண்டு மானாலும் அல்லது நன்னிலைமைக்கு வரவேண்டுமானாலும், தற்காலம் பிராமணரென்று பெயர் வழங்கி வருகின்றவர்களையே சரணமாகக் கொண்டால், மேற்படி பலன்களை அனுபவிப்பானென்று வரைந்திருக்கிறது.
ஒரு மனிதன் மற்றொரு நல்லொழுக்கம், நற்போதனையுடையவரை அடுத்து, அவருடைய நற்போதனைகளைக் கற்று அதன்படி நடப்பானேயாகில் அதனாலுண்டாகும் நல்ல பலன்களையும், அப்படி நடவாவிடில் தீய பலன்களையும் அனுபவிக்கிறது உலக அனுபவமாயிருக்க; நூதன பிராமண ஜாதிகள் இரந்துண்டே ஜீவனஞ் செய்யவேண்டியதென்று மேற்படி சாஸ்திரவிதமிருக்க, அப்பேர்க்கொற்றவர்களைச் சாருகிறவன், தானும் இரந்துண்ணுந் தொழிலுக்கு வருவதுலகவனுபவ மாயிருக்க, மேற்கூறிய மோட்சமும், நன்னிலையுமொருவன் அவாளால் அடைவதெப்படி?
இப்படி நீதியில்லாததும், நியாயத்திற்கு ஒத்தில்லாததும், உலக அனுபவத்திற்கு முறண்பாடாயுள்ள போதனைகளைப் புகட்டக்கூடியது சாஸ்திரமாகுமா? இப்பேர்பட்ட நூலுக்கு மனுதன்ம சாஸ்திரமென்று பெயரிடவாகுமா? அல்லது அப்பெயரை நாவினாலு முச்சரிக்கலாகுமா?

சு.நா.சுந்தர முதலியார். இரங்கூன்.

விடை : தமது சங்கையிலுள்ள மநுதன்ம சாஸ்திரமானது ஒரு கூட்டத்தோர் தங்கள் சுயப்பிரயோசனத்திற்கென்று நூதனமாக ஏற்படுத்திக் கொண்ட நூலேயன்றி பொது நலங் கருதிய முந்நூலன்றாம். அவற்றிற் கூறியுள்ள சாதிகளெவரேனுந் தற்காலமுளரா. அவற்றிற் கூறியுள்ள விதியின்படி நடப்போருமுளரா இல்லை. அதுகண்டு பிராமணனொருவன் இருக் கின்றானென் றெண்ணுவதில் யாது பயன். தீண்டப்படாத பறையனென் றழைக்கப் படுவோனிடம் பிராமணனெ உயர்த்திக் கொண்டோன் ஊழியஞ் செய்கின்றான். அதனால் பிராமணனே ஒருவனை உயர்த்திக் கொண்டு சூத்திரனென ஒருவனைத் தாழ்த்திக்கொண்டு சங்கிப்பதிற் பயனில்லை. பிராமணன் சூத்திரனென்னும் பெயரையே பற்றற மறந்து மனிதர்களையே மனிதர்களாக பாவித்து ஒழுக்கத்திலும் சீலத்திலும் நிலைத்து தாங்கள் முன்னேறுவதுடன் தங்கள் சந்ததியோர்களையும் முன்னேற்றுவிக்கும் முயற்சியில் முனைவீராக.

- 7:45; ஏப்ரல் 15, 1914 –
 

132. இந்து என்னும் மொழி

வினா : இந்துவென்னு மொழி எக்காலத்தில் யாவரால் தோன்றி யது, சிவமதம் விஷ்ணுமதம் வேதாந்தமதமென்பது எக்காலத்தில் தோன்றியது அவைகளை யாக்கியோன்களாம் மூல புருஷர்கள் யார். சிவனென்னு மொழியும் சைவனென்னு மொழியும் பூர்வ பௌத்தர்களால் தோன்றியதா அன்றேல் மூல புருஷனற்ற நூதன இந்துக்களால் தோன்றியதா, விஷ்ணுவென்னு மொழி பூர்வ பௌத்தர்களால் தோன்றியதா அன்றேல் இந்துக்களால் தோன்றியதா, வேதாந்தம், பிரமம், ஆன்மமென்னு மொழிகள் பூர்வ பௌத்தர்களால் தோன்றியதா, அன்றேல் இந்துக்களால் தோன்றியதா, கடவுளென்னு மொழியும்