பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 105

மென்றும் வழங்கும் மொழி முதல் முடிவுக்கே வேதாந்தமென்றுங் கூறப்படும். இவ்வேதாந்தங்களே முப்பத்திரண்டென் வழங்குவர்.

உபநிடதவுரை

"இருளகற்றுநால் வேதத்துபநிடத மெண்ணான்கி னெங்கோன் சொன்ன / பொருளதனை
நெஞ்சகத்தே சௌபாக்ய குருவென்னும் பொருளினோடு / மருளகற்றும் படியழுத்தித்
தமிழ்போலு மதனையொரு வழியெண்ணான்கா / யருளகத்தி லிருந்துரைத்த வதியசமே
வதிசயமற்றறிகிலேனே."

வேத அந்தமே வேதாந்தமென விரிந்துள்ளவற்றை புத்தரது ஆதி வேதத்திற்காண்க.
பிரமமென்பது மண்ணிற்குமோர் பெயராம் மண்ணானதை பலவாறு கொத்தி பழுக வழுகக் கலக்கி பாழ்படுத்தினும் நன்செயலாம் தானிய விருத்தியின் பயனையே அளித்து சீவர்களை ரட்சிப்பது போல ஓர் மனிதனைப் பலவகையாயத் துன்பங்களைச் செய்தபோதிலும் தானே தான் தண்மெயுற்ற சாந்தநிறைவால் சகலருக்கும் நன்மெபுரிந்து நல்வாய்மெ யூட்டுவானாயின் அவனையோர் பிரமமென்றழைப்பர். இத்தகைய பிரமமென்னும் பெயரை ஆதியிலளிக்கப் பெற்றவர் புத்தரேயாவர்.

பின்கலை நிகண்டு

"பிரமன் மேதினி சிறந்தோன் பிதாமகன் பிதாவிதாதா."

மணிமேகலை

பிரமதரு மன்றா மெனக்கருளிய.

ஆன்மன் ஆத்துமமென்னு மொழியோவென்னில் வேற்றுமெ நயத்தால் உடலுயிரென வழங்கினும் ஒற்றுமெ நயத்தால் மகட பாஷையில் ஆன்மன் ஆத்துமனென்றும், சகட பாஷையில் புருஷன் புருடனென்றும், திராவிட பாஷையில் மநுடன், மனிதனென்றும் வழங்கப்படும். இம்மநுடனே மனமர்சகன்று நிருவாண மடைவானாயின் அநான்மனென்றும் அத்துவிதி யென்றுங் கூறப்படும்.

மணிமேகலை

அநித்தந்துக்க மநான்மா வசுசியெனத் / தனித்துப்பார்த்துப் பற்றறுத்திடுதன்.

இவ்வேதாந்தம், பிரமம், ஆன்மமென்னு மும்மொழிகளும் பௌத்தர் களால் வரைந்துள்ள மொழிகளேயோம்.
கடவுளென்னு மொழியின் பொருளோ நன்மெ சொருபியென்னப்படும் ஆதியினின்று தோன்றி வரும் மனித கூட்டங்களில் புத்தரொருவரே சகல நன்மெ சொரூபியாக விளங்கியபடியால் அவரை ஆதியங் கடவுளென்று சிந்தித்து வந்தார்கள்.
சாமியென்பது சகல பற்றுக்களுமற்று சுயம்பிரகாசமாய் ஒளிதரும் பரிநிருவாணத்தின் பெயராம், இப்பெயரும் புத்தபிரானுக்குரிய ஆயிரநாமங்களில் பரிபூரண வானந்த நிலையின் பரிபக்குவ காலக்குறிப்பென்னப்படும்.

பின்கலை நிகண்டு

"ஆத்தன் குற்ங்களில்லான் சோகமர் கடவுளாதன் / சாத்தன் வேதாந்தநாதன் சமியனாமயன் சயம்பு
நீத்தவன் பிதாவிதாதா நிரம்பரன னந்தஞானி / தீர்த்தன் மால்பகவன் சாமி சீபதி சீமான்
செய்யோன்."

மணிமேகலை

கடவுள் பீடிகைகண்டு கைதொழுது

சூளாமணி

ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை / போதியங் கிழவனை பூமிசை யொதிங்கினை
போதியங் கிழவனை பூமிசை யொதிங்கிய / சேதியென் செல்வநின் திருவடி வணங்கினம்.

சீவகசிந்தாமணி

"பான்மிடை யமுர்தம் போன்று பருகலாம் பயத்தவாகி / வானிடை முழக்கிற்கூறி
வாலறவதமுதமூட்டி தேனுடை மலர்கட்சிந்தி திசை தொழ சென்றபின்னாட் / டானுடை
யுலகங்கொள்ள சாமி நாள் சார்ந்ததன்றே"