பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 107

அதாவது புத்ததன்மத்தில் உலக முடிவு யாதெனில் உலக பாசபந்த சகல பற்றுக்களுமற்ற விடமேயாம். உலகத்தில் மாறி மாறி பிறந்துழலும் வரையில் பலவகைத் துக்கங்களிலவதி யுற்று உழலுகின்றான். இராகத்துவேஷ மோகமற்றபோது சன்மனசென்னும் மனமாசகன்று உலக முடிந்ததென்பது கருத்தாம்.
உலகத்தில் தோற்றும் பொருட்கள் யாவுமழியுமென்னுந் திடநிலை கொண்டு மனமாசகன்று ஐம்புலனொடுங்குமிடத்து ஞானசாதனனுக்கு தன்னிற்றானே வோர் ஒளி தோன்றுவதும் தசநாதங்களாய சப்தங்கள் கேட்பதுவும் அனந்தம் எல்லைகட் புலப்படுவதும் தங்கடங்கள் ஞானக் கண்ணிற்கு தேவர்களும் சித்தர்களுந் தோற்றுவதியல்பாம். இஃது உலக பாசபந்தமற்று உலக முடித்தோருக்கன்றி உலக பாசபந்தமுற்ற உலகத்தோருக்கன்றாம்.

மௌனதெரிசனம்

"அருமெயென்ற மௌனத்தை மூட்டு மூட்டு / வடங்காத பொறிகளைந்து மடங்கிப் போகும்
விருமெயென்ற விந்திரிய மாண்டுப் போகும் /இருள்மலம் போம் தி ரோதையில்லை
மயக்கம்நீங்கும் வெருவுபலகோடி கன்மங்கணத்தில் நீங்கும் வெளியினுள்ளே
வொளிதோன்றும் நாதங்கேட்கும் உரிமெயுடன் மௌன சித்தியாகவாக
வுருமுனக்கானந்தவுருவமாமே.”

கடவுளந்தாதி

"அன்பருக்கன்புறரும் பரஞ்சோதியை யைம்புலத்தோ /டென்புருகக் கலந்துள்ளே யுருகியிரவுபகல்
தம்புருவீணை சுரமண்டலத் தொனி தாளதித்தி / மின்பெருகுங் கொலுச்சிங்காரங் கண்டிருமெய்
மகிழ்ந்தே”
 “சிலம்பொலியப்புறமிப்பாற் சிலம்பொலி தேவர் சபை / பலம்பொலி யோசையது
வெகுநாதமதற்குமப்பால்
வலம்புரி சுற்றியவாசலு முச்சி வழி திரந்தால் / புலம்பொலி யாடலும் பாடலுமாகிய பூரணமே”

மச்சமுனியார்

"விழித்து மிக பார்த்திடவே பொரிதான் வீசும் / முச்சந்தி வீதியிலே தீபந்தோன்றும்
சுழித்தியிலே போகாம லொருமனதாய் நின்றால் / சுத்தமென்ற நாதவொலிக் காதில்
கேட்கும்."

என ஞானசாதனனின் மனமாசகன்ற நிலையே ஒளியாகவும், தசநாடிகளடங்கு நிலையே தசநாதங்களாகவும், சிறு வாசல் திரப்பே பீடங்களாகவும் ஆனந்தமாக அவனவன் காணுங் காட்சிகளையே கிறீஸ்துவும் உலக துக்கங்களை விவரித்து ஞானசாதனன் முடிவில் மின்னலொளி போன்ற தோற்றமும், எக்காள தொனியாம் சப்தமும் உன் வீட்டினானந்தமும், அவர்களுக்கவர் தோன்றும் நிலையையே அவர் விளக்கியுள்ளாரன்றி உலக முடிவின் கருத்தன்றாம். பாபத்தின் சம்பளம் மரணம் பெற்று உலக துக்க முடியாதவர்களும், புண்ணியத்தின் சம்பளம் நித்திய சீவனைப்பெற்று உலக துக்க முடிந்தவர்களும் இரு வகையோராவர். இதுவே கிறீஸ்துவின் சத்தியமொழி யென்னப்படும்.

- 7:45; ஏப்ரல் 15, 1914 –
 

135. பெளத்த சோதிரர்களுக்கு அறிவிப்பு

முர்க்கரோடிணங்குவதினும் முநிவது கொடிது.

அன்பார்ந்த சோதிரர்களே, சற்று கவனியுங்கள். நமது சாத்தியபோதமாய புத்ததன்மம் நாளுக்கு நாள் பரவியும் சிறப்புற்றும் வருவது சாத்துருக்களுக்கும் அவர்களால் தூண்டப்பெற்றோருக்கும் மிக்கப் பொறாமெயும் பற்கடிப்புந் தோன்றி பல வகையாய இடுக்கண்களை உண்டுசெய்து வந்த போதினும் சத்தியதன்மம் மேலு மேலும் ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் கண்டே சிலர் தங்கடங்கள் மனம்போனவாறு தமிழ் லட்சணமற்று தூஷண மொழிகளுற்ற சுட்டுக் கடிதங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
அவர்களால் வெளியிட்டுவரும் சுட்டுக் கடிதங்களில் எழுத்திலக்கண மின்னது, அவற்றிற்கு மாறாயதின்னது, சொல்லிலக்கணமின்னது, அவற்றிற்கு மாறாயதின்னது, பொருள் இலக்கணமின்னது, அவற்றிற்கு மாறாயதின்னதென