பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மெய்ப்பு பார்க்கும் பொழுது ஏதோ ஒரு சிக்கல்

அகர வரிசை
I
பழமொழிகளும் சொற்றொடர்களும்

அளந்ததே அளக்கப்படும் II: 136.
அரைக்கல்லி முழு மொட்டை II: 16.
அவனவனன்றி யோரணுவு மசையாது II: 438.
அவலை நினைந்து உரலையிடிப்பது போல் 1:55.
அவசரக்கோலம் அள்ளித் தெளிப்பது போல் 1: 33, 37.
அவரவர்கள் செய்த தீவினைகளை அவரவர்களே அநுபவிப்பார்கள் 1:353.
அரசையெதிர்த்தக் குடியும் ஆதரவற்றக் கொடியும் அடியழிந்து கெடும் I: 33.
அன்னியர் பிள்ளையை வூட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் 1: 288.
அன்னியனுக்குப் பெற்ற பிள்ளையைத் தன்பிள்ளையென்று தாராட்டிப் பலருக்கும்
        பகட்டுவது போல் II: 437.
அப்பியாசங் கூசாவித்தை I: 197. III: 61.
அண்டை வீட்டுக்கார அப்பாசாமி I: 178.
அன்னமிடுவோர் வீட்டில் கன்னமிடுவதுபோல் 1: 377, 516.
அதிக முடிக்கியக் கயிறு அறுந்து திரும்புவதுபோல் 1:45, 266.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் 1 : 402.
அரசர் எவ்வழியோ குடிகளும் அவ்வழி I: 716.ஆசை வெட்கமறியாது I : 9.
ஆட்டுக்கடாக்கள் பிந்துவதும் புலிகள் பதுங்குவதும் தங்கள் பாச்சலுக் கென்பது போல் I: 480.
ஆடு நனையுதென்று ஓனாய் குந்தியழுவதுபோல் 1:51.
ஆடுகிடந்தவிடத்தில் ஒரு மயிரேனுங் கிடையா I: 388, 427.
ஆடுகள் நனைகிறதென்று புலிகள் புரண்டழுவது போல் 1: 228, 239, 279, 397, 400, 405, 471.
ஆடு கசாயிக்காரனை நம்பி அடியோடழிவது போல் I: 229, 262, 286, 338, 377, 398, II: 438, 439. III:48.
ஆட்டு மந்தைகள் புலிகளை அடைக்கலம் புகுந்தது போல I: 252.