பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


ஆப்பை பிடுங்கி விட்ட குரங்கு I: 299.
ஆகாயக் கோட்டையும் அந்தரப்புட்பமும் I: 380.
ஆரியக் கூத்தாடினாலுங் காரியத்தின் பேரில் கண் I: 126.
ஆய்ந்தோய்ந்து பாராதவன் தான்சாகக்கடவன் I: 55, 248, 446.
ஆய்ந்தோய்ந்து பேசாவினையின் பயனே பயன் ' III': 3.
ஆரடாவிட்டது மானியமென்றால் நான்தான் விட்டுக்கொண்டேன் என்பது போல I: 189, 242, 676. II: 463.


இரண்டாட்டுக்கு ஒரு குட்டி III: 40.
இரும்பைத் துரும்பு அரிப்பது போல II: 643.
இரவு முழுவதும் சிவபுராணம் கேட்டு விடிந்தவுடன் சிவன் கோயில்களை இடிப்பது I: 214.
இரவு முழுவதும் இராமாயணங் கேட்டு விடிந்தபின் இராமருக்குச் சீதை என்ன முறை என்றால் போல் II: 425.
இமயமலையை வெட்டி வழிவுண்டாக்குவதுபோல் I: 98.
இலிங்கத்தைக் கண்டால் பண்டாரம் என்றும் நாமத்தைக் கண்டால் தசரியென்றுங் கூறுவது போல் I: 51.
இஞ்சித்தின்னக் குரங்கைப்போல் I : 52, 283, 460, 492.
இரும்பைக் கொண்டே இரும்பை கடைத்திரட்டல் போல் I: 57.
இரந்துண்போனுக்கு தனம்பெருகில் ஏசாதெல்லாமேசுவான் பேசாதெல்லாம் பேசுவான் I: 706.
இராஜாங்க மெவ்வழியோ குடிகளு மவ்வழியே I: 430.
இராமன் ஆண்டாலென்ன, இராவணனாண்டாலென்ன I: 374.
இருப்பு வலையிற் சிக்குண்ட புலியை நீக்கி விடுவது போலும் I: 364, 424.
இரும்பை அடிக்கும் அடி துரும்புக்கும் படுவதுபோல I: 159, 225, 300, 375.
இறைக்கும் கிணறு சுரக்கும் II: 686.
இலவு காத்த கிள்ளைகள் போல III: 101.


ஈட்டி எட்டியவரையிற் பாயும் பணம் பாதாளம் வரையிலும் பாயும் II: 742.
ஈட்டியின் முனையை உதைத்ததுபோல் I: 30, 95, 211, 282, 497.


உட்சுவரிடிந்துவிழ புறச்சுவர் பூசுவதைப்போல் I: 484, 473, 501.
உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமுந் தட்டிவுடையாமல் தானே வுடையும் I: 445, 499.
உப்பிருந்த பாண்டம் தன்னிற்றானே உடைவதுபோல III: 35.