பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /111

உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு I: 207, 260.
உண்டி கொடுப்போர் உயிர்கொடுப்போரே II: 105, 681.
உண்ட வீட்டை இரண்டகஞ் செய்பவர் I: 328, 515.
உமிகுத்தி மணிதேடுவது போல் I: 100.
உமியைக்குத்தி கைசலித்தவாறு போல் II: 245, 446. III: 95.
உழைப்பாளிகள் உறம் பெற்றுழைக்கின் பெருக்காளிகள் பெரும்பேர் பெறுவர் I: 426.
உடைந்த மூங்கிலுக்கு முருங்கைக் கொம்பை முட்டுக்கொடுப்பது போல் I: 380, 707.
உருசிகண்ட பூனை உரியை உரியை தாவுதல் போல் I : 477
உள்ளங்கை நெல்லிக்கனிபோல் I: 47, 97, 142, 174, 176, 189, 273, 274, 305, 357, 461, 506, 517, 519, 594. II: 398. III: 41.
உள்ளங்கையில் லக்கிரியிட்டவர்களை உள்ள காலவரை நினையுங்கோள் I: 229.
உள்ளூரில் ஓணான் பிடிக்கயேலது அயலூரில் கோணான் பிடிக்கச் சென்றது போல் II: 85, 106.


எடுத்தக் கைப்பிள்ளை எல்லோருக்கும் பிள்ளை என்பது போல் I: 237.
எழியவன் பெண்சாதி எசமானனுக்கெல்லாம் பெண்டென்பது போல் I: 237.
எல்லவரும் பல்லக்கேற எத்தனித்துக் கொண்டால் எடுப்பவர்கள் யார் I: 408.
எட்டிப்பழுத்தாலென்ன ஈயாதவன் வாழ்ந்தாலென்ன II: 678.
எட்டினால் குடிமி எட்டாவிடில் பாதம் I: 67, 168, 412. III: 45.
எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம் I: 27, 37, 214. II: 677.
எண்ணெய் வாணியன் கதைபோல் I: 72.
எண்ண மெல்லாம் பழகாமெயாலே III: 34.


ஏந்துங் கைகளுக்குப் பிள்ளை I : 290
ஏனப்பா பந்தயத்தில் தோற்றுப் போனீரே என்றால் இன்னும் போடும் பந்தயம் என்பதுபோல் I:51.
ஏழைகளழுதக் கண்ணீர் கூரிய வாளுக்கொக்கும் I: 266, 362, 369, 388, 389, 495.


ஐயர் வார்த்தையை ஐயம் பெருமாள் வார்த்தை போல் எண்ணிக் கொள்ளும் II: 88.


ஒருக்கண்ணிற் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணெயையும் தடவுவதுபோல் I: 21.


ஓட்டின் வினை வீட்டைச்சுடும் III: 42.