பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு



கற்றோரை கற்றோரே காமுறுவர் III: 42.
கண்டுபடித்தலே கல்வி காணாது படித்தல் தெண்டக் கல்வி II: 470, 570, 740.
கணக்கன் காலால் போட்ட முடியை கலைக்ட்டர் கையால் அவிழ்க்க முடியாது I:39.
கனத்தின் பேரில் வளைவென்பது போல் I: 264, 369, 413.
கடவுளைத் தொழுவதினுங் கலகம், சாமியைத் தொழுவதிலுஞ் சண்டை I: 293.
கல்லை நம்பினவனுக்கும் மோட்சம், கடவுளை நம்பினவனுக்கும் மோட்சம் III: 89.
கன்றுகள் கூடி களம்பரிப்பது போல் I: 28.
கட்டுப்பட்டால் கவரிமான் மயிரால் கட்டுப்படல் வேண்டும் குட்டுப்பட்டால் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும். II: 463. III:41.
கட்டுசாதமும், ஒருவர் கற்பனா செயலும் நெடுநாளிருக்கமாட்டாது I: 71.
கண்டறியாதவன் பெண்டுபடைத்தால் காடுமேடெல்லாம் இழுத்தடிப்பான் I: 466.
கண்டுபடிப்பதே படிப்பு மற்றப்படிப்பெல்லாம் தெண்டப்படிப் பென்றறி I: 209. II: 153, 470, 494, 570. III: 64.
கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு II: 501.
காக்கையானது ஆந்தையை பகல் காலத்தில் வெல்லும் ஆந்தையோ காக்கையை இராக்காலத்தில் வெல்லும் I: 16.
காக்கையானது பனைமரத்தில் உழ்க்காரவும் பனம்பழம் வீழவும் ஆயது போல் II: 438.
காய்ந்துபோம் பயிறுக்குத் திதி மழை பெய்து காத்தது போல் I: 681.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் I: 402.
காரியத்தின் பேரில் கண்ணோக்கம் இராது வீரியத்திற்கு விருது கட்டுகிறவர் I: 38.
காகதாளிச்செயலுக்கும் காகதாளி நியாயத்துக்கும் பொருந்தும் போல் I: 280.
காமாலைக் கண்ணனுக்கு சூரியன் மஞ்சள் நிறமாகத் தோற்றுவது போல் I: 355. III: 68.
கிள்ளுக்கீரைபோல I: 9. III: 86.
கீற்றில் வேண்டாம் சாற்றில் வாருங்கோ I: 688. III: 39.
கீரியையும் பாம்பையுங் கீரைத்தோட்டத்திற்குக் காவல் வைத்தது போல் I: 515.
குடித்தனக்காரன் அம்மிக்கல்லை அதிகாரி வீட்டுக் கோழி முட்டை உடைக்கும் I: 275.
குடிமி தட்ட வேண்டியது தான் I: 60.
குதிக்கமாட்டாதவன் கூத்தைப் பழித்தான் பாடமாட்டாதவன் பாட்டைப் பழித்தான் I: 51.
குதிரையானது கொள்ளென்றால் வாயைத்திறப்பதுங் கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்ளுவதுபோல் I: 9.
குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்டு உலாவுவோனைப் போல I: 195. II: 654
குழந்தையின் துடையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல் I: 411, 445
குடிப்பவன் விடுப்பது குதிரைக் கொம்பை பார்ப்பதற் கொப்பனை I: 210.