பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 113

குய்யோ முறையோ I: 401, 425.
குரங்குகளுக்குப் பூமாலை சூடுவது போல III: 68.
குரங்கைச் சீர்திருத்த கோலும் பிள்ளைகளைச் சீர்திருத்த பிரம்பும் III: 33.
குரங்குக் கையில் வாளைக் கொடுத்து காவல் வைத்தக் கதை போல் I:21.
குருடனுக்குக் குருடன் வழிகாட்டுவது போல II: 481.
குலத் தளவே யாகுமாங்குணம் I: 330. II: 146. III: 48.
குணம் போல் வெளுப்பது குங்கல்யநிறம் I: 416.
கெடுவான் கேடு நினைப்பான் III: 19.
கொட்டினால் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி I: 158, 295, 365. II: 768.
கொள்ளியை யிழுத்துவிட்டால் கொதிப்பது அடங்கிப்போம் I: 365.
கோழிக்குஞ்சுகளுக்கு ஙுரையில்லையென்று பருந்து பரிதவிப்பது போல் I: 228.
கோழித் திருடியுங் கூடவே குலாவுவது போல் I: 445.
கைம்முதலில்லா வியாபாரிக்கு ஆதாயமில்லாதது போல் I: 10.
கைப்பணமிருந்தும் பட்டினி, கலியாணம் செய்தும் சன்னியாசி I: 29.


யதார்த்த வாதி வெகுஜனவிரோதி I: 385, 487, 690.
யார் வீட்டுச் சொத்துக்கு யார் அத்து நியமிப்பது I: 270.


சாண் தண்ணீ ரில் மல்லாந்து விடுவது போல் I: 205.
சித்திரை மாதம் செல்வம் பிறந்தால் ஆனகுடிக்கே அனர்த்தம் III: 86.
சிம்மத்தின் மீது செம்மறியாடுகள் முநிவதுபோல் I:234.
சிறுகக் கட்டி பெருக வாழவேண்டும் II: 473.
சிறுமீன்களெல்லாம் பெருமீன்களுக்கு இரை I: 431.
சுட்டுக்குருவி பருந்தை எதிர்ப்பது போல I:51.
சுட்டுக்குருவி கருடன் மீது போர் தொடுப்பதுபோல் I: 58, 234. III: 106.
சுடர் விளக்காயினும் நன்றாய் விளங்கிடத் தூண்டுகோல் ஒன்று வேண்டும் II: 757.
சுவற்றை வைத்துக் கொண்டு சித்திரம் எழுத வேண்டும் I: 68.
சூதன் கொல்லையில் மாடுமேய்வதை சுற்றிப் பார்த்திருப்பதுபோல் I:31. II: 520.
சூடுகண்ட பூனை அடுப்பங்கடை நாடா I: 343. III: 81.
சூரியனைக்கண்ட பனிபோல் II: 432.
செம்பதுகளிப்பதற்றால் செம்பொன்னாம் II: 138.
செம்மறி ஒன்றன்பின் ஒன்று மடிவதுபோல் I: 4.
சொன்னதைச் சொல்லுங் கிளிபோல் II: 30,68, 152, 168, 209. III: 5, 95.


ஞானமும் கல்வியும் நாழி அரிசியில் I: 81.