பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


வலையில் சிக்குண்ட பாம்பை எடுத்துவிட கடிப்பதுபோலும் II: 768.
வரப்புயர நீருயரும், நீருயர பயிருயரும், பயிருயர குடிவுயரும், குடியுயர கோனுயரும் I: 111, 287, 423.
வானம் சுருங்கில் தானம் சுருங்கும் I:3.
வாழும் பெண்ணை தாயார் கெடுத்தாள் I: 234.
வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பது போல் I: 311.
வாழையடி வாழைபோல் II: 491.
வாய்க் கொழுப்பு சீலையால் ஒழுகின்றது I: 233.
விஷப்பாம்புகளுக்குப் பால் வார்த்து வளர்ப்பது போலும் I: 364.
விஷமென்றறிந்தும் விழுங்குவதுபோல I: 271.
விழலுக்கிரைத்த நீர்போல் I:60, 392.
வெள்ளிடை மலைபோல் I: 149.
வெகுமானமாகிலும் அவமானமாகிலும் மேன்மெயோர் செய்யிலழகாம் III:41.
வெல்லமென்னும் வாயை நக்குவது போல் I: 205, 271.
வேலி பயிரைத் தின்பதுபோல் I: 256.