பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. கடவுள் வாழ்த்து



நன்மெயாங் கடவுள் பூமியைத் திருத்தி நன்மெயாந்தண்மெய் நீருற்றி
நன்மெயாங்கடவுள் வித்தினையூன்றி நன்மெயா மறக்கதிரோங்க
நன்மெயாங்கடவுள் காவலதாக நன்மெயா முண்மெயினின்று
நன்மெயாங்கடவுள் கமலநற்பாதம் நாடுவாம் நற்றவமாதோ.

அரசர் வாழ்த்து
அன்பெனூம்பிரிடீஷ திபர்களோடு அன்புருக்கொண்டவிக்டோரியாள்
அன்பெனுந்தலைமெய் மைந்தனாம் ஏழாமன் புரை எட்வர்டெம்மரசர்
அன்புருங்கவர்னர்ஜெனரலுஞ்சென்னை அன்பராங்கவர்னருமவர்தன்
அன்பெருஞ் சங்கத்தவர்களுமோங்க அன்பினை யாதரித்தாள்வாம்.

தமிழ் வாழ்த்து
ஒருபைசாத்தமிழ் னிவனுதவானென்பார்
ஒருபைசாத் தமிழருமை யறியாமாந்தர்
ஒருபைசாத் தமிழிலுண்மை யறிவாராயின்
ஒருகோடிப் பொன்னிஃதென் றுரைப்பர்மாதோ

சுதேச வாழ்த்து
சீர்பெறவிரும்புந் திருவளர் சுதேச சித்தால் வித்தது மோங்க
மோவேறு சுதேசக்கைத் தொழில் கல்வி பேருரு கொண்டு நற்குடிகள்
ஓர்பெறுஞ் சுதேச வகமகிழுருவனைவர் மேற்கருணை கொண்டுடில்
நீர்வளமோடி நிலவள மோங்கி நித்திய சுதேசமாம் மாதோ.

பரதேச வாழ்த்து
பற்பல வித்தை பகர்பரதேசப் பருணிதர் பட்சமும் பதிவு
முற்பவத்தோடுவுணர்த்தியித்தேசவொற்றுமெய்முன்னெனவளர்த்து
கற்பனையாகுங்கசடுகள் போக்கிகருத்தில் கைத்தொழிலினைக் கருதும்
நற்பரதேசி நவில் பல வித்தை நானில மோங்குக மாதோ

ஆங்கில திராவிட வராந்திர பத்திரிகையின் வாழ்த்து
சீர்பெறுஞ் சென்னை மேப் ளொடு ஸ்டான்டர்ட்
சிறந்த டைம்ஸ் இண்டுவும் வாழ்க
பேர்பெறும் இண்டியன் பேட்ரியாட்டு டனே
பெருமையூர் லிப்ரலும் வாழி
நேர்பெறுஞ் சுதேசமித்திரன் விகடன்
னேய நல்லிந்தியாவென்போன்
ஆர்வ பூலோக வியாது சத்தூதன்
அரி தமிழ்மாது மென்வாழி
ஏந்திர குசிகன்பமதியும் ஆந்திர பிரகாசிகா என்பனும் வாழி

-11; சூன் 19, 1907 –


2. பத்திரிகா பாயிரம்


உலகினிற் பலகலை வோதியுணர்ந்தும் உத்தம மத்திம அதம
மென்னும் ஊழுணராது நிலைகுலையு மக்கட்கு நீதியும் நெறியும்
வாய்மையும் புகட்டி வளமோங்கச் செய்வான் வேண்டி தத்துவ
சாஸ்திரிகளிற் சிலரும் இராசாயண சாஸ்திரிகளிற் சிலரும் கணித
சாஸ்திரிகளிற் சிலரும் வித்தியா சாஸ்திரிகளிற் பலரும் ஒன்றுகூடி
யிப்பத்திரிகையை ஒருபைசாத் தமிழனென வெளியிட்டிருக்கின்
றோம். இவ்வினிய தமிழ்மாதினை யீன்றவர் யாவரென்றும் ஈன்ற
மாதை யிருகரமேந்தி வளர்த்தவர்கள் யாவரென்றும் வளர்ந்தமா
துக்குப் பஞ்சலட்சணம் வகுத்தவர்கள் யாவரென்றும் விளக்குவ
துடன் தமிழென்னும் இனிய பாஷையில் நல்லப்பாம்புக்கு நஞ்சுண்டது
போல் தீராவிடமென்னும் நஞ்செழுத்துக்கள் தோன்றி
நஞ்செழுத்துக்கள் அமுத யெழுத்துக்களென்னு மிரண்டை
பொருத்தச்சீரில் நஞ்செழுத்துக்களை யகற்றி அமுத எழுத்துக்
களை புகட்டி ஆசுகவி மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி.

களையும் பாடவல்லோர் நாவலராவர். அவர்களையே உத்தம புலவ ரென்னப்படும். நஞ்செழுத்துக்கள் அமுத எழுத்துக்களை உணர்ந்தும் அமுதயெழுத்தைப் பொருத்தும் பொருத்தமரியாது பாடுவோரை மத்திம