பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

புலவரென்னப்படும். நஞ்செழுத்துக்கள் அமுதயெழுத்துக்கள் யாதென்றுணராது பாடுவோர்களை அதம புலவர்களென்னப்படும். இத்தகைய வதமப் புலவர்களின் செய்யுட்களாலும்...... வித்தை, புத்தி, ஈகை சன்மார்க்கமென்.. (சில வரிகள் தெளிவில்லை )

- 1:1; சூன் 19, 1907 -

3. சண்டாளன்

ஐயா பொதுநலப்பிரியரே,

சண்டாளனென்னும் வார்த்தைக்குப் பொருள் சிலர் தாழ்த்தியும் சிலர் உயர்த்தியும் கூறுகின்றனர்.

ஆயினும் அம்மொழி வடமொழியேயன்றி தென்மொழியன்று. அதாவது சண்மதம், சண்முகம் என்னும் மொழிகளைத் தழுவி, சண் ஆளனென்னு மொழியும் வழங்குகின்றமையால், அறுவகைத் தொழிலின் செயலைக் குறிக்குமேயன்றி மற்றும் இழியச்செயலை குறிக்காவாம்.

அறுவகை யிழியச்செயல்க ளென்னூற்களிலு மில்லாமையால் அந்தணரறு தொழில், அரசரறு தொழில், வணிகரறு தொழில், வேளாளரறு தொழிலாகும் ஒருவர் தொழிலை வழுவாது செய்யுஞ் செயல்மொழியன்றே கூறத்தகும்.

இத்தகைய சிறப்புற்ற மொழியை யிழிவாக வழங்குங்காரணம் யாதென்பீரேல் பொறாமெயேயாம்.

விவரம் : தேவ அடியாளென்னும் சிறப்பு மொழியும் தட்டுவாணி எனும் சிறப்பு மொழியும் தற்காலம் பேரிழிவாக வழங்குவதுபோல் சண்டாளனென்னும் சிறப்புமொழியும் இழிவாக வழங்கி வருகின்றது.

ஒவ்வொருவரும் இம்மொழியை பகுத்தரியா காலங்களில் இழிவர்களெனவெண்ணினபோதிலும் பகுத்தரிந்தக்கால் அம்மொழியை சிறப்பிக்க வேண்டியதேயாம்.

தண்-ஆமரை தண்டாமரை, பண்- வோளம் பண்டோளமென்பது போல், சண்-ஆளனென்பது சண்டாளனென வழங்கி வருகின்றது.

- 1:8; ஆகஸ்ட் 7, 1907 –

4. ஆதிதமிழர் அபிவிருத்தி சங்கம்

இந்து தேசத்தில் பராயர்களால் நசுங்குண்டு தற்கால பிரிட்டிஷ் துரைத்தனத்தாரால் தலை நிமிர்ந்து நிற்கு மெழியக் குடிகளை சீர்படுத்தி சிறப்படையச் செய்வதற்கு ஓர் கூட்டத்தார் இருந்தே தீர வேண்டும்

அக்கூட்டத்திற்குரிய பெயர் ஓர்பாஷையையேனும் ஓர் மதத்தை யேனும் ஓர் சாதியையேனுங் குறிக்காமல் பொதுவாக சரித்திரத்தை அனுசரிக்கும். சிறப்புப் பெயராயிருத்தல் வேண்டும்.

அப்பெயர் இன்ன வகுப்பாரைச் சார்ந்ததென்று இராஜாங்கத்தாரும் மற்றவர்களும் தெரிந்துக்கொள்ளுவதற்கு இருபத்தோர் ஜாதிகளிலுமுள்ள பூர்வத்தமிழ்க் குடிகளின் பிரதிநிதிகளை வரவழைத்து பெருந்தொகையார் சம்மதப்படி அப்பெயரை ரிஜிஸ்டர் செய்து நிலைநிருத்தல் வேண்டும்.

இவ்வகை நோக்கமின்றி ஓர் பாஷையின் பெயரால் சங்கத்தை நிலை நிருத்துவோமானால் ஆதவரும் ஆதி தமிழரென்பர். வன்னியரும் ஆதி தமிழரென்பர். நாடாரும் ஆதி தமிழரென்பர். வேளாளரும் ஆதி தமிழரென்பர். இவ்வகை இடுக்கத்தில் இராஜாங்கத்துப் பதிவில் இப்பெயர் நிலைக்குமா நிலைக்காதாவென்றாராயல் வேண்டும்.

அஃதேனென்பீரேல் 1890 ஆம் வருடத்தில் பூர்வீக திராவிடர்களென்று கூறி வெளிவந்தபோது இராஜாங்கத்தார் அதை சற்று நிதானிக்குங்கால் பராயர்கள் தோன்றி தமிழ் பாஷைக்குடிகள் யாவருந் திராவிடர், கன்னடருந் திராவிடர், மராஷ்டியருந் திராவிடர், ஆந்திரருந் திராவிடரென்று கூறி கலைத்ததினால், இராஜாங்கத்தார் பறையர்களென்னும் பெயரை மாற்றிப் பஞ்சமர்களென்னும் ஓர் பெயரைக் கொடுத்து அதை அநுஷ்டானத்திற்குக் கொண்டு