பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /173


மந்திரங் கீதமுந் தந்திரஞ் சோதிடம்
வல்லவர் போற்றுங் கல்விமா னெவனோ
இல்லற மென்னு நல்லற மேற்றே
மக்கட் பேறொடு மிக்க அன்பினில்
விருந்தினை யோம்பி யிருந்தவ னெவனோ
அமைவுட னாளுஞ் சமய நூல்களைப்
பழந்தமிழ் நூல்களை அளந்தளந் தாய்ந்து
பண்டைத் தமிழர்கள் கொண்டவோர் பெருமையும்
ஆரிய மக்களாற் சீரிய லவர்கள்
உற்ற சிறுமையும் உற்று நோக்கியே
மைக்குள் மணியெனச் சிக்கு ளிருந்தே
தம்மவர் தம்மது செம்மை யுணராது
தம்மைக் குறைத்துத் தாமே கூறியும்
ஒழுக்க மிழந்தும் அழுக்கி லமிழ்ந்தும்
ஒழிவதை யோர்ந்தே விழுமிய அவரை
முன்னிலை நிறுத்தத் தன்னுடல் பொருளுயிர்
மூன்றையு மளித்துச் சான்றோர் செயல்கொடு
முன்னர் ஆரியர் இன்னல் களைந்து
"தனக்கென வாழாப் பிறர்க்குறி யாளன்"
அறநெறி வளர்த்த திறலோ னெவனோ
"பிறப்பொக்கு மெல்லா உயிர்க்குஞ் சிறப்பொவா
செய்தொழில் வேற்றுமையா" னென மொழிந்த
நாவல ருரையை நாவலத் தானும்
விளம்பரத் தானும் விளம்பின னெவனோ
அழுக்கா றில்லா ஒழுக்காறு பற்றி
மறந்தும் பிறர்க்கு மறஞ்செயா னெவனோ
இன்னா செய்தார்க்கு மினியவை நாடுஞ்
செந்தண்மை பூண்ட அந்தண னெவனோ
பொறுமைக் கேயொரு உறைவிட மாக
இருந்த குணமலைப் பெருந்தவ னெவனோ
நாட்டார் நகைக்கு நாணில னெவனோ
வீட்டா ரறத்தை யீட்டின னெவனோ
அண்டினர்ப் புரக்கும் அயோத்தி தாச
பண்டிதப் பெயரைக் கொண்டவ னெவனோ
அன்னவ னிவ்வுட லுன்னி விடுத்தே
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தது
நிலமிசை நீடு வாழும்
இன்ப மடைந்தனன் துன்பற வன்றே

நேரிசை வெண்பா


ஒன்பதா மாண்டிலெனை யுற்ற வுடற்பிணியாந்
துன்பொழித்த தேசிகனே தொல்லுலகில் - அன்பநின
தின்னுரையு நன்மருந்து மேற்றிருந்த என்கிளைஞர்க்
கென்னுரைக்கே னின் பிரிவை யீங்கு

சென்னை , 7.5.14.

திரு.வி. கலியாண்சுந்தரன்