பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /3

வருகின்றார்கள்.

ஆதலின் இப்பெயரை இராஜாங்கத்தார் ஏற்றுக்கொள்ளுவாரோ பராயர் மறுப்பால் தூற்றிக்கொள்ளுவரோ அறியேம்.

- 1:12; செப்டம்பர் 4, 1907 –

5. ஸ்ரீ விபினசந்திரபாலர் விருதாப நிலைமை

நமது விபினசந்திரபாலர் அவர்களுக்கு இராஜாங்கத்தாரால் ஆறு மாதத்திய சாதாரண காவல் விதிக்கப்பெற்றதைக் கேட்ட சிலர்துக்கித்தும், சிலர் சந்தோஷித்துமிருக்கலாம். இவ்வகைத் துக்கமும் சந்தோஷமுமே பெரியோர் களை சிறைச்சாலைக்கேகச் செய்துவிடுகின்றது.

காரணம் சுதேசத்தை சீர்திருத்தி சுயராச்சியம் விரும்பும் சுதேசிகள் உள் சீர்திருத்தங்களாகும் மதக்கலகங்களை மண்ணாய் மறைத்தும் சாதிபேதங் களைச் சாம்பலாக்கியும் தங்களுக்குள்ள சுத்தவீரத்தை வியாபாரத்திலுங் கைத்தொழிலிலும் நிலைக்கச் செய்வார்களாயின் தேசஞ் சிறப்புற்று குடிகளும் சுகமடைவார்கள்.

அங்ஙனமின்றி ஐயா ஊராருக்கெல்லாம் ஓதுகிறார் போராருக் கெல்லாம் போதிக்கிறார் என்பதில் சுதேச அரசர்களையும் சுதேச ஜமீன் களையும் சுதேச மிராசுகளையும் ஒன்று சேர்த்து வியாபாரத்தையுங் கைத் தொழிலையும் விருத்தி செய்ய முயன்றார்களா?

அவ்வகை முயன்றிருப்பார்களாயின் இத்தேசத்தின் 40,000 ரூபாய் சீர்மைக்குப் போய் அவ்விடமுள்ள இரத்தினக்கம்பளத்தை இவ்விடம் வருவிக்குமோ இல்லை.

இவர்கள் முயற்சி யாவும் ஆகாயத்திற் கோட்டை கட்டி அந்தரத்தில் உஞ்சலாடுவதற்கெண்ணி அவசர அரசாட்சிக் கோறி அறியாப் பிள்ளைகளை ஆபத்துக்குள்ளாக வைத்து அவர்களைப் பெற்றோர் களை அல்லோகல்லோ மென்றலையச் செய்துவிடுகின்றார்கள். இதுதானோ சீர்திருத்தக் காரர்களின் பெருமெய்.

அந்தோ ஓர் தேசத்தில் ஓர் பெரிய மனிதன் எடுத்த விவேக முயற்சியால் அத்தேசக்குடிகள் யாவும் குதூகலமுற்று சந்தோஷத்திலிருக் கின்றார்களென்றால் அஃது சருவதேயத்தாரையுஞ் சந்தோஷிக்கச் செய்யும். அங்ஙன மின்றி ஒருவரடைந்த துக்கத்திற்கு ஊராரெல்லாங் கட்டியழுவதில் யாதுபயன். நம்முன்னோர்கள் கூறியபடி "ஆய்ந்தோய்ந்து பேசாவினையின் பயனே பயன்.

விரோதச் செயல்கள் வீணேகெடு மாம்
விரோத கூட்டம் வீணேயகலும்
விரோதபோதம் வீணாய்முடியும்
விரோத சிந்தை விழலாகும்மே.
அவிரோதத்தா லடுத்தது பளிங்காம்
அவிரோதத்தா லச்சமு மகலும்
அவிரோதத்தா வனைத்துங் கூடும்
அவிரோதந்தா னவசியமாமே.

- 1-14; செப்டம்பர் 13, 1907 –

6. அஞ்ஞானக் கிறிஸ்தவர்கள்

வினா : அஞ்ஞானக் கிறிஸ்தவர்களென்போர் யாரென்பதே. இதற்கு நமது பத்திரிகாபிமானிகள் உரையளிப்பார்களென்று எதிர்நோக்கும்.

- ஓர் சுதேசி

ஐயா , ஓர் சுதேசியெனு மன்பரே! கேண்மின், தாம் அஞ்ஞானக் கிறிஸ்தவர்கள் யாவரென்று வினாவியது வியக்கத்தக்கதே. காரணம், கிறிஸ்தவர்களாயினும், பௌத்தர்களாயினும், வைணவர் களாயினும், சைவர்களாயினும், வேதாந்தி களாயினும், ஞானோதயம் உண்டாம் வரையில் அஞ்ஞானிகளேயாவர்.

விசுவாசத்தினால் ஞானஸ்தானம் பெற்றக் கிறிஸ்தவன் ஒருவனும் இத்தேசத்திலில்லை. அவனை தான் மெஞ்ஞான கிறிஸ்தவனென்று கூறத்தகும். ஏனென்றால், பாசபந்தங்களற்ற ஞான நிலைபெற்று கிறிஸ்து அவனிலும்,