பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /5


புகையும் வீடுகளில் நிறப்பலாம். வேப்பமரத்துப் பட்டையைக் கொண்டு வீதிகளின் ஓரமாகக் குழிகள் வெட்டி பட்டைகளைக் கொட்டி கொளுத்தி யதின் புகையைப் பரவச்செய்யலாம். இவ்விரோக சுரங்கண்டவுடன் ஒரு பலம் வால்மிளகை அரைபடி தண்ணீர்விட்டுக் காய்த்து உழக்களவு சுண்டவைத்து நாளொன்றுக்கு மூன்றுவேளை சாப்பிட்டால் புழுக்கள் மடிந்து சொற்ப சாந்தியுண்டாம்.

- 1:22; நவம்பர் 13, 1907

8. பாபநாசத்தாரேய்ப்பும் பறையர்களே மாப்பும்

இதுவுமோர் தந்திரஜீவனம் போலும்.

கனம் கேயர் ஆர்டிதுரை என்னும் பார்லிமெண்டு மெம்பரொருவர் சென்றவாரஞ் சென்னைக்கு வந்திருந்த சங்கதி சகலருக்கும் தெரிந்த விஷயம். அவர் சென்ற 7உ தஞ்சாவூருக்குப் போகும் வழியிலுள்ள ஓர் ரயில்வே ஸ்டேஷனண்டை பெருங்கூட்டமாக ஏழைப் பறையர்களையும் பள்ளர்களையும் நிறுத்தி அந்த ஸ்டேஷனண்டை கேயர் ஆர்டிதுரை வந்தவுடன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கவர்ன்மெண்டார் அதிக வரியைப் போட்டு வாதிக்கின்றார்களென்று சொல்லும்படிக் கற்பித்து கூச்சலிடச் செய்தார் களாம். சொன்னதைச்சொல்லுங் கிளிபோல் அந்தப் பேதை ஜனங்களுங் கூச்சலிட்டார்களாம். அதைக்கேட்டப் பார்லிமெண்ட்டு மெம்பர் உங்களுக்கு பூமிகள் உண்டாவென்றாராம். எங்களுக்கு பூமிகளில்லை எங்கள் எஜமான் மார்களுக்கு பூமிகளுண் டென்றார்களாம். அதைக்கேட்ட கேயர் ஆர்டி உங்களைப்பற்றி யோசிக்கின்றேனென்று சொல்லி விட்டுப் போய்விட்டாராம்.

அந்தோ! ஏழைப் பறையனென்றழைக்கும் ஓர் சாதியார் உழைப்பிற்குத் தான் ஆளாயிருக் கின்றார்களென் றாலோசித்தாலோ, இல்லை உழைப்பதுடன் அவர்களை முன் தள்ளி மற்றோர் பிழைப்பதற்கும் ஆளாயிருக் கின்றார்கள்.

அதாவது, மிஷநெரிகளென்போர் ஏழைப்பறையரென் போர்களைப் படங்கள் பிடித்து மேல் நாட்டிற்குக் கொண்டுபோய் அவ்விடமுள்ள பிரபுக்களுக்குக் காண்பித்து அவர்களை விருத்தி செய்கின்றோமென்று வேண்டிய திரவியங்களை சேகரித்து வந்து கல்விசாலைகளை ஏற்படுத்தி ஏழை பறையர்களிடம் சம்பளமும் பெற்றுக்கொண்டு சேகரித்துவந்த பணத்தால் பெரியசாதிக ளென்போர்களைக் கிறிஸ்தவர்களாக்கி அவர்களுக்கு உதவி செய்துக்கொண்டு பறையரென் போர்களைக் கவனிக்காமல் வண்டி குதிரை வைத்துக்கொண்டு தங்கள் சுகத்தை விருத்தி செய்துக் கொள்ளுகிறார்கள்.

பறையர்களென்போர் படங்களைக் காட்டிப் பணஞ்சம்பாதித்து வந்து பள்ளிக்கூடம் வைத்து சொற்ப கல்வி உதவிச்செய்து மற்ற சுகத்தை அவர்கள் அனுபவித்துக்கொண்ட போதிலும் மிஷநெரிகளால் பறையர்களுக்கு சொற்பக் கல்வியின் பலனாயினும் விளங்குகின்றது.

தஞ்சாவூர் மற்றுந் தேசங்களிலுள்ள எஜமான்களோ இந்த பேதைக் குடிகளுக்கு பறையர்களென்னும் பட்டப் பெயரையும் அளித்து அவர்களுக்குள்ள பூர்வ சுகங்களையுங் கெடுத்து கோலுங் குடுவையுங் கொடுத்து “மானங்காய்ந்தால் போடி, மழைப்பேய்ந்தால் வாடி” என்னும் நன்றிகெட்ட எஜமான்கள் ஏழைப்பறையர்களை முன் தள்ளி கவர்ன்மெண்டார் வரிகளை அதிகப்படுத்திவிட்டார்களென்றுக் கூச்சலிடச் செய்து தங்கள் பெயரையுந் தங்களையுங்கவர்ன் மெண்டாருக்குக் காட்டிக் கொள்ளாமல் ஏழைப் பறையர்களை இழுத்துவிட்டு சுகங்கண்டால், தாங்கள் அனுபவித்துக் கொள்ளலாம், துக்கங்கண்டால் பழிக்குப் பறையர்களை இழுத்துவிடலா மென்று சமையயுக்த்தஞ் செய்திருக்கின்றார்கள்.

இதுவும் ஓர் யுக்த்தியாகுமா? கனவான்கள் முன் முயன்று ஏழைகளைக் காப்பாற்றவேண்டியது இயல்பு. அங்ஙனமின்றி எழைகளை முன் தள்ளி கனவான்கள் பிழைப்பதை கனமென்று கூறலாமோ ஒருக்காலு மாகா.

ஏழைக்குடிகளை இன்னு மேது தீங்கு செய்தாலும் அவர்கள் மறுதீங்கு மனந்துணிந்துஞ் செய்யமாட்டார்கள். ஏழைகளுக்குத் தீங்கு செய்து வருந்