பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


அந்தந்த காலங்களுக்குத் தக்கவாறும் கூலிகளைக் கொடுத்து அன்புபாராட்டி ஆதரித்துவருவான்.

வேலைகளறியா வீணர்கள் பெரிய உத்தியோகஸ்தர்களாகத் தோன்றுவதினால் இன்னின்ன வேலைகளை இன்னினிய வேலைக்காரர்கள் செய்துவருகின்றார்கள் அவரவர்களுக்குத் தக்கக் கூலிகளை உயர்த்த வேண்டு மென் றுணராமல் அவர்களுக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு இவர் மெத்த லாபங் காட்டுவதுபோல் அபிநயித்து கூலிகளைக் குறைத்துக் கொண்டாட்டம் போடுகின்றார்கள். இப்பஞ்சகாலக் கொடுமையால் அதிகக் கூலிக்கேட்டு அல்லல்படும் வேலையாட்கள் சொல்லாமலே நின்றுவிடுங்கால் திண்டாட்டப் படுகின்றார்கள்.

இவ்வோர் பெருத்த சாலைகளை நிருமித்து வேலை நடத்தும் முதலாளிகள் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் இன்னான்கும் நிறைந்திருப் பார்களாயின் அவர்களை அண்டி சீவிக்கும் வேலையாட்கள் ஒவ்வொருவரும் அவர்கள் சீவிய காலமட்டிலும் அவர்களை விட்டு நீங்கார்கள். அதினா லச்சாலையின் தொழிலும் நீடித்த தலைமுறை

ஓங்கும். 

அங்ஙனமின்றி பொருளாசை, பொறாமெய், பொய்ச்சாப்பு, பற்கடிப்பு இன்னான்கும் நிறைந்த முதலாளிகள் அச்சாலைக்கு அதிகாரிகளாக வந்து சேர்வார்களாயின் கூடிய சீக்கிரத்தில் ஆட்களுங் கலைந்து சாலையு மெலிந்துபோமென்பது திண்ணம்.

- 1:40, மார்ச் 18, 1908 -

17. தூத்துக்குடி திருநல்வேலி துக்கம்

தற்காலந் தூத்துக்குடியிலுந் திருநெல்வேலியிலும் நிறைவேறிவருந் துக்கச் செய்கைகளையுங் குடிகளுக்குள்ள மனோபீதியையும் ஆராயுங்கால் மிக்க வியசனமே.

அமிதவாதிகளென்னும் ஓர் கட்சியும், மிதவாதிகளென்னும் ஓர் கட்சியும் இத்தேசத்திற்றோன்றி ரூபாயிற்கு நாலுபடி அரிசியிலும் குண்டுப்பட்டு சாவுங் குடும்பத்தோர் குடிக்கக் கூழுக்குங் குண்டியிற்கட்டத் துணிக்கு மலைவதிலும் ஓர் பெரும்பலனைத் தேடி விட்டார்கள். அந்தோ! இவ்வகை வீண்வீராப்பில் மடிந்தவர்கள் ஓர் அரசாங்க யுத்தத்திற் சென்று மடிந்திருப்பார்களாயின் தனது பெண்சாதி பிள்ளைகளுக்கு உபகார சம்பளமேனுங் கிடைக்கும்.

இன்னாருடன் சென்றார்கள் இதுவிஷயத்திற்கு மடிந்தார்களென்னுங் காரணமில்லா நெல்லிக்காய் மூட்டைகளை என்னென்று கூறலாம் நெல்லிக்காயேனும் உப்பிட்டால் ஊறுகாயிக் குதவும். அதுவும் பயனில்லாமற் பாழடைவது யாதுபயன்.

ஐந்து பெயர் உயிர் அநியாயத்தில் மாண்டதே. அன்னோர் குடும்பத் தோர் என்ன துக்கத்தில் ஆழ்ந்தி யிருக்கின்றனரோ அறியேம். அவர்களுக்கு ஆறுதற் கூறலாயினும் போயிருப்பரோ, அவர்க ளப்பாகைப் போயிருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் கையை கடிக்குமென்பதேயாம்.

கற்றவர்கள் மிக்க வாசஞ்செய்யு மிடங்களில் காவலாளராம் போலீஸ் உத்தியோகஸ்தர் வேண்டியதில்லையென்பது துணிபு. ஆனால் தூத்துக் குடியிலும், திருநெல்வேலியிலும் இருக்கும் போலீசாருடன் தண்டபோலீசு மேற்பட்டுவிட்டது இழுக்கேயாம்.

பிராண்டதுரை யென்பவர் திருச்சினாப்பள்ளிக் கலெக்ட்டராயிருந்த காலத்தில் மோஹரம் பண்டிகைதோரும் பெருங்கலக முண்டாகிக் கொண்டேயிருந்தது. அதன்காரணம் அந்த ஜில்லாவில் (தாலீம்கானாக்களும் வஸ்தாதுக்களும் அதிகமாயிருந்ததினாலேயாம் அதினந்தரங்கம் அறிந்த கலெக்ட்டர் ஒவ்வொரு வஸ்தாதையும் அவர்கள் சிஷியர்களையும் அழைத்து ஒவ்வொருவருக்கும் (திமிறு வரி) போட்டுவிட்டார். அன்று முதல் ஒவ்வொரு வஸ்தாதும் ஊரைவிட்டே ஓடிப்போய்விட்டார்கள்.