பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /13


அன்பரே: விதிமுறைத் தொகைகளை விளங்கக்கேட்பதில் வினாவும் விடையும் நான்குவகைத்தாம். அதாவது-துணிந்து கூறலுங், கூறிட்டு மொழிதலும், வினாவில் விடுதலும், வாய்வாளாமெயுமாகும். இவற்றுள்,

1-வது, தோற்றும் பொருட்கள் யாவுங் கெடுமோ கெடாதோ வென்னில் யாவுங் கெடுமென்று துணிந்து கூறல். 2-வது, செத்தான் பிறப்பானோ பிறவானோவென்னில், பற்றற்றவனோ பற்றறாதவனோவெனக் கேட்டு மொழிதல். 3-வது, கொட்டை முந்திற்றோ பனை முந்திற்றோ வென்னுங் கேள்விக்கு எக்கொட்டைக்கெப்பனையென்று அவன் கேள்வி யால் அவனைத் தெளிந்துக்கொள்ளச் செய்தல். 4-வது, ஆகாயப்பூ பழைதோ புதிதோவென்னுங் கேள்விக்கு வாய்வாளாமெயால்மாற்ற முறைக்காதிருத்தல்.

எனும் நான்கு வினாவிடைகளுள் தாம் கடாவிய கடாவல், "பொய்யை மெய்யென்ற மூடரை புண்ணியரென்று புராணங்கூப்பிடுமானால்" கைவல்ய வாதரவால், பொய்யென்றே துணிந்து கூறுவோமாயினும் அதனை விளங்கக்கூறுவான் வேண்டி விடுத்திருக்கின்றோம். புராணங்களின் விவரம் வருங்கால் பெரிய புராண விவரம் பரக்க விளங்கும். அவசரமாகத் தெரிந்துக்கொள்ள வேண்டின் 05-06-ம் வருஷங்களில் இந்துநேசன் பத்திரிகையில் சில வாதங்கள் நடந்து ஞானசம்பந்தர் சரிதை உண்மெயிற் பொய்யே என்று எழுதியிருக்கின்றார்கள். பார்த்துக் கொள்ளலாம். பெரிய புராணத்தை ஏற்று பரிந்து பாடுபடும் பாவலர் இக்கருணை தங்கிய ஆங்கிலேயர் துரைத்தனமில்லாமல் மகமதியர் துரைத்தனமிருக்கு மாயின் வேஷபிராமணர்கள் போதனையால் கோடாவாலா சாமியாராகவும், இந்துக்களென்போர் துரைத்தனமே யிருக்குமாயின் சுடுகாட்டுவாலா சாமியாராகவும் இருக்கவேண்டி வருமே என்பதை சற்றுஞ் சிந்தியாது சடகுடுப்பானடிக்கின்றார்போலும்.

தற்காலந் தோன்றியுள்ள இந்துக்களென்போர் துரைத்தனத்தில் சற்சங்கத்தோரை வசியிலுங் கழிவிலு மறைந்து வதைத்துள்ளப் படங்களை மதுரை சிலாலயச் சுவர்களில் வரைந்து வைத்திருக்கின்றார்கள். அவ்வசியில் வாதைப்படுவோர் முகசாடையும், தாம் கூறியுள்ள பிரசங்கியார் முக சாடையையும் உத்துப்பார்ப்பாரானால் அவர்கள் குடும்பந்தானா யிவரென்பதும் இவர் குடும்பத்தார்கள் அவர்களென்பதும் எளிதில் விளங்கும்

- 1.51; சூன் 3, 1908-


21. மாதவரம் போக வழியேதென்னும் வினாவிற்கு

மாடு எத்தனை முட்டையிட்டது கோழி எத்தனை குழந்தைபெற்றது என்னும் வினாவிடுப்பது போன்ற ஓர் கடிதத்தைக்கண்டு மிக்க வியப்புற்றோம். காரணம் யாதென்பீரேல்-இத்தேசத் தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் இராமலிங்கம் என்பவர் ஓர் கடிதம் எழுதி பிராணாயாமமென்னும் மொழியின் சந்தேகத்தை விளக்கவேண்டுமென வினாவியிருக்கிறார். அதற்கு சத்தியவிரதமென்னும் மற்றொருவர் உமது ஊரெது, சாதியெது, மதமெதுவென வினாவில் விடுத்திருக்கின்றார். இத்தகையப் பிராணாயாமத் திலும் சாதிவூழல் மதவூழல் இருக்குமாயின் பிரத்தியாகாரத்திலெவ்வூழ லெழுமோ விளங்கவில்லை. அங்ஙனம் சத்தியவிரதன் கூறியவாறு சாதிவூழலும் மத வூழலு மிருக்குமாயின்.

தாயுமானவர்

சாதிகுலம்பிறப்பிறப்பு பந்தமுத்தி யருவுருவத் தனமெய் நாமம்
ஏதுமின்றி யெப்பொருட்கு மெவ்விடத்தும் பிரிவறநின் றியக்கஞ்செய்யும்
என்றும்
எடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்கு சேரவாருஞ் செகத்தீரே
என்றும்

விவேக மிகுத்த மகாஞானியார் ஜெகத்துள்ள சருவ மக்களும் ஞானா முதைப் புசிக்க வாருங்கோளென்று கூறியிருக்க சத்தியவிரதனென வெளிவந்த