பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 31


அவ்வாறே புகல்கின்றது. நைடத்தமோ தேவர்களென் பவர்களை எல்லாம் காமனோயினால் தகிக்கப்பட்டு கலங்குபவர்களென்று வகைவகையாய்க் கூறுகிறது. அத்தகைய நூலிலிருந்து தாங்கள் உதாரணங் கொடுத்திருப்பதால் இந்நைடத சரித்திரத்தைப்பற்றியும், புத்தருடைய தருமத்தைப் பற்றியும் எமது மனம் பெருத்த சங்கையினால் போராடுகிறது. ஆதலால் மகா கனம் பொருந்திய பத்திராதிபரே, எமது கடிதத்தை தாங்கள் குற்றமாகக் கொள்ளாமல் மன்னித்து தெளிவுபடுத்தி அருளுவீரென்றுந் தங்களுடைய மேலான கனத்தை வேண்டிக்கொள்ளுகிறேன்.

மிஸ்.எம்.வி.கே... செகன்ராபாத்.

விடை : அம்மே தாம் வினவியுள்ள வினா மிக்க விசேஷித்ததேயாம். ஒருவனது குற்றத்தை அன்னியன் சாட்சியைக்கொண்டு ரூபிப்பதிலும் அவன் குடும்பத்தான் சாட்சியைக்கொண்டே ரூபிப்பது மிக்க மேலதாகும். இரு ம்பின் வளவை நீட்ட வேண்டுமாயின் இரும்பை கொண்டே நீட்டுவது சுலபமாகும் அதுபோல், புத்ததன்மமாம் மெய்யறத்தை விளக்குங்கால் சத்திய தன்மங்களையே சாட்சியங் கூறுவதாயின் அசத்தியர்களுக்கு அவைகள் நிலைபெறாவாம். ஆதலின் அவர்களது கற்பனா கதைகளைக் கொண்டே சத்தியதன்மத்தை ரூபித்துள்ளோம்.

அவர்களது கற்பனா கதைகளில் தங்களது அசத்தியங்களை மெய்ப்பிப் பதற்கு சாத்தியங்களைக் கொண்டு சிலதை சேர்த்துள்ளார்கள். அதாவது இந்திர னென்னும் பெயரோ புத்ததன்மத்தில் ஐம்புலனை வென்றக் காரணப்பெயர்.

அதன் காரணார்த்த மறியா கபோதிகள் சில கற்பனா கதைகளை வகுத்து குப்பைகாரிக்கு இலட்சுமியென்னும் பெயர் கொடுப்பது போல் அசத்தியவாக்கு, அசப்பிய நிலை, துன்மார்க்க குணமமைந்தோனுக்கு இந்திரனெனப் பெயரைக்கொடுத்து புத்ததன்மத்தில் ஒற்றுமெய்க் கேடாம் சாதிபேத மென்பதில்லாத வாழ்க்கை சரிதையைத் தங்கட் கட்டுக்களிற் சேர்த்து பௌத்தர்கள் நம்பத்தக்க ஏதுக்களில் எழுதி வைத்திருக்கின்றார்கள். அவ்வகை எழுதியுள்ள பொய் மெய் வாக்கியங்களில் மெய்யைக் கொண்டே பொய்யை அகற்றுமாறு நைடதத்தை ரூபித்து அந்தணன் புசிப்பை விளக்கியுள்ளோம்.

- 3:44; மார்ச் 30, 1910 -

46. வியாபார சங்கம்

வினா : ஐயா, நமது பத்திரிகையில் மஅ-அ-ஸ்ரீ கி.தே. இந்திரவேல் பிள்ளை , ம -அ-அ-ஸ்ரீ த. தாழமலைப்பிள்ளை , ம -அ-அ-ஸ்ரீ தி.சி. நாராயண சுவாமிப் பிள்ளை அவர்களால் வெளியிட்டுள்ள வியாபார சங்க விஷயமாகத் தங்களுடைய ஆலோசினையும் சம்மந்தித்திருக்குமென்றே நம்பி இதனை எழுத ஆரம்பித்தேன். அதாவது நமது குலமரபினோரின் பூர்வ சரித்திரங் களையும், பேரானந்த ஞானத்தையும் விளக்க அனந்த சோதிரர்களின் அறிவு தெளிந்து ஆனந்த நிலையில் இருக்கின்றார்கள்.

இன்னும் அதற்காதரவாய் வியாபார சங்கமொன்றை நியமித்து மதபேதமின்றி குலமரபினோரை ஒற்றுமெய்க்கும் சீருக்குங் கொண்டு வருவ துடன் சிறுவர்களுக்குக் கல்வியும் கைத்தொழிலும் விருத்தி செய்வதாய்க் கண்டுள்ளபடியால் அதன் ஆரம்பத்தை எவ்விதமாக முடிக்க ஆரம்பித்திருக் கின்றீரோ அதன் சுருக்கத்தை அடியேனுக்கு விளக்குவீரேல் அனந்தங் கையொப்பக்காரர் சேரக்கார்த்திருக்கின்றோம்.

வி. பாலசுந்தரம், வேலூர்.

விடை : அன்பரே, தற்கால மெடுத்துள்ள வியாபாரசங்கத்தின் விருத்தி நடை எவ்வாறென்னில், குறித்துள்ள (ஷேர்) ஆயிரம் பெயர் சம்மதமும் கையெழுத்தும் வந்தவுடன் தகுந்த நம்பிக்கையும் நற்குணமுமமைந்த டைரெக்ட்டர்களை நியமித்து இண்டியன் கம்பனீஸ் ஆகட்டின்படி சங்கத்தை ரிஜிஸ்டர் செய்து தக்க பாங்கரை ஏற்படுத்தி ஒவ்வொரு ஷேர்ஹோல்டர் களிடத்தும் அரை ஷேர் வசூல் செய்து 5,000 ரூபாயையும் பாங்கியில் வைத்து