பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 35

தங்களைப்போல் ஏழைகளை நேசித்தும் தங்களைப்போல் ஏழைகளும் சுகம்பெறக் கருதுவோர் என்றும் சுகம் பெறுவார்களென்பது நித்தியமாகவும் விளங்கும். அதன் அநுபவக்காட்சியோவென்னில் நமது தேசத்தையும் நம்மெயும் ஆண்டுவரும் ஆங்கிலேயர்கள் தங்களை அடுத்த ஏழைகள் யாவரும் சுகச்சீர் பெற்று தங்களைப்போல் வித்தையிலும் புத்தியிலும் கனமடையச் செய்து வருவதினால் தாங்கள் வித்தையிலும் புத்தியிலும் செல்வத்திலும் விருத்திபெற்று பத்து ஏவலாளர் பதினைந்து ஏவலாளர் வைத்துக்கொண்டு சுகானந்தத் திலிருப்பதுடன் தங்கடங்கள் சந்ததியோரும் மேலுமேலும் பெருகி சுகச்சீர் பெற்று சென்ற இடமெங்கும் சிறப்புடைந்து வருகின்றார்கள். அவர்களது செயலையும் அனுபவத்தையும் கண்டேனும் நம்தேயத்தோர்கள் கனமடைவார்களென்று நம்புகிறோம்.

- 4:5; சூலை 13, 1910 -

51. இந்தியர்களுக்கு சமரசவாட்சியும் பெரும் உத்தியோகமும் வேண்டுமாம்

அவ்வகை வேண்டுவது நியாயமா அந்நியாயமா என்பதை அவரவர் களே ஆலோசிக்க வேண்டுவது அழகாகும். அவ்வகை ஆலோசியாது வேண்டுவது சுயநலமென்றே கூறவேண்டிவரும்.

அதாவது ஐரோப்பியர்களைப்போல் தங்களுக்கும் சமரசவாட்சியும் பெருத்த உத்தியோகங்களும் வேண்டுமென்போர் தங்களுடன் வாசஞ்செய்யும் இந்தியர்களுக்கு இந்தியர்கள் சமரசவாட்சியும் பெரும் உத்தியோகமும் பெறவாயினும் கொடுக்கவாயினும் மனம் சம்மதிக்கின்றார்களா, இல்லையே.

அவர்கள் சிறிய சாதியார், எங்களுடன் உட்காரப்படாது, எங்களைப் போல் அவர்கள் மேல்பதவிக்கும் வரப்படாது நாங்கள் பெரியசாதியார், சகல ஆட்சியும் நாங்களே பெறல் வேண்டும், சகல சுகமும் நாங்களே அநுபவித்தல் வேண்டும் எனச் சொல்லி ஆறுகோடி மக்களை அலக்கழித்து வரும்படியான வர்கள் ஐரோப்பியர்களைப்போல் தங்களுக்கும் ஆட்சி வேண்டும் தங்களுக்கும் பெரும் உத்தியோகங்கள் வேண்டுமென்றால் நியாயமாமோ அந்நியாயமேயாம்.

காரணம் இந்திரதேச பௌத்தர்கள் தொழிலுக்கென்று வகுத்திருந்த பெயர்களை சாதிகளெனப் பொய்யாக ஏற்படுத்திக்கொண்டு தங்கள் பொய்யானக் கட்டுக் கதைகளுக்கு எதிரடையாயிருந்த பௌத்தர்கள் யாவரையுந் தாழ்ந்த சாதிகளென வகுத்து தங்களைப் பெரிய சாதிகளென உயர்த்திக் கொண்டு ஆயிர வருடங்களுக்கு முன்பு இந்திரதேசத்திற் குடிவந்தபோது பிச்சையிரந் துண்டு தற்காலமும் பிச்சையிரந்துண்பவர்களிற் சிலர்களும் மற்றுஞ் சொற்ப விவேகிகளும் ஐரோப்பியர்களைப்போல் சம ஆட்சியும் பெரும் உத்தியோகமும் பெற விரும்புவார்களாயின் இத்தேசத்துப் பூர்வக் குடிகளும் சகல சுகானுபவங்களை அனுபவித்தவர்களும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்தில் நிறைந்தவர்களுமான சாதிபேதமற்ற திராவிடர் களுக்கு அச்சுதந்திர மில்லாமற்போமோ, ஒருக்காலும் போகாது. பிரிட்டிஷ் ராஜநீதியும் தன்னவரன்னியரென்றும், அன்னியருக் கன்னியரென்றும் ஆமோ, ஒருக்காலும் ஆகாது. பொய்யாகியத் தந்திரங்களால் தங்களைப் பெரிய சாதிகளென ஏற்படுத்திக்கொண்டு தங்களுக்கு எதிரிகளாம் பௌத்தர்களைத் தாழ்ந்த சாதிகளென வகுத்துக்கொண்டுள்ளவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நமது சுயப்பிரயோசனத்திற்காக மேன்மக்களாம் பௌத்தர்களைத் தாழ்ந்த சாதிகளென வகுத்துத் தலையெடுக்காமல் நசித்துவந்தோம், இன்னமும் இந்த பிரிட்டிஷ் ஆட்சியில் நசித்துக்கொண்டு வருவோமாயின் நமது பொய்யாகிய சாதிக்கட்டுப்பாடுகளும் சமயக் கட்டுப்பாடுகளும் “உப்பிருந்த பாண்டம் தன்னிற்றானே உடைவதுபோல்” உடைந்து போகுமென்றுணர்ந்து தங்கள் பொய்க் கட்டுப்பாடுகளால் தாழ்த்தி நாசமடையச்செய்துள்ள ஆறுகோடி மக்களையும் பழய நிலைக்குக் கொண்டு வந்து சகல சுகமும் அனுபவிக்கச் செய்வார்களாயின் இவர்கள் கோறும் ஆட்சியையும் பெரும் உத்தியோகங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியாரளித்து