பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மெய்ப்பு பார்க்கும் பொழுது ஏதோ ஒரு சிக்கல்

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /39 "கீற்றில் வேண்டாம் சாற்றில் வாருங்கோ" ளென்னும் பழமொழிக் கிணங்க நான் கிறிஸ்தவனாகிவிட்டேன் இந்துக்களது மதாசாரம் வேண்டாம் சாதியாசாரமட்டும் வேண்டுமென்பதினால் அவர் சாதியில் இந்துவும், மதத்தில் கிறிஸ்தவனுமாயிருக்கின்றார். ஆதலின் அவரை அரைக்கிறிஸ்தவ னென்பதே துணிபாம். ஓர் சாதியாசாரமுள்ள இந்து மகம்மது மதத்தைச் சார்வாராயின் அன்றே அவர் முழு மகமதியனாகிவிடுகின்றார். காரணம், அவர் தன்னைப் பிராமண மகமதியனென்றாயினும், செட்டி மகமதியனென்றாயினும் கூற மாட்டார். தன்னை மகமதியனென்றே கூறுவார். அதாவது, அவர் இந்து வாயிருக்குங்கால் அநுசரித்துவந்த சாதியாசாரம், சமயாசாரம் இரண்டையும் ஒழித்து மகமதியனானபடியால் யதார்த்தத்தில் அவர் தன்னை முழு மகமதியனென்றே கூறுவதுடன் அம்மத வைராக்கியத்திலும் குரு விசுவாசத்திலும் கூட்ட ஒற்றுமெயிலும் நிலைத்து அவர்களுடன் பொருந்தி வாழ்கின்றார். இது ஓர் மத சார்பின் பெருக்கத்திற்கும், விருத்திக்கும், ஒற்றுமெய்க்கும் அழகாகும். அங்ஙனமின்றி சகல மனுக்களையும் ரட்சிக்கக் கிறிஸ்து பிறந்தாரென்று சொல்லும்படியானவர்கள் அக்கிறிஸ்துவின் பெயரை வைத்துக் கொண்டே நான் சாதிக்கிறிஸ்தவன், அவன் சாதியில்லாக் கிறிஸ்தவன் என்பார்களாயின் இவர்களுள் யாரை ரட்சிக்கக் கிறிஸ்து பிறந்தார், சாதிக் கிறிஸ்தவர்களை என்பாராயின் சாதியுள்ளோரை ரட்சிக்க மநுதன்ம சாஸ்திரமும் பிராமணருமிருக்கின்றார்கள். சாதியில்லாக் கிறிஸ்தவர்களை என்பாராயின் அம்மொழி சமேரியா இஸ்திரியை சாதிகேளாது நீரை வினவியவரின் ஆசாரம் பொருந்தும். ஆதலின் சாதிபேதமில்லாக் கிறிஸ்தவர்கள் முழு கிறிஸ்தவர் களும், சாதிபேதமுள்ளக் கிறிஸ்தவர்கள் அரைக் கிறிஸ்தவர்களேயாவர். அத்தகைய அரைக் கிறிஸ்தவர் சாதிபேதமில்லா முழுக் கிறிஸ்தவர் களை நோக்கி உங்கள் சாதியை ஒளியாது. கூறுங்கோளென்பார்களாயின் சாதியில்லாக் கிறிஸ்தவர்கள் எங்களுக்கு எக்காலும் சாதியில்லையென்று துணிந்து கூறுவதே சிறப்பாகும். அங்ஙனமின்றி அரைக்கிறிஸ்தவர்கள் வார்த்தை களை நம்பி முழுக் கிறிஸ்தவர்கள் மோசம் போவது முற்றுமிழி வைத்தரும். பாப்பானவரிடஞ் சென்றுள்ள இரு பிராமணர்கள் குடி, விபச்சாரம், திருட்டு, கொலை முதலியக் கிரியைகளில் பிரவேசிப்பார்களாயின் பாப்பா னவர் பிராமணரை உயர்குலத்தோர் உயர்குலத்தோரென சிறப்பிப்பரோ, ஒருக்காலும் சிறப்பிக்கமாட்டார். காரணம், அவனவன் நற்செய்கைகளால் உயர்ந்தவனென்றும் தீச்செயல்களால் தாழ்ந்தவனென்றும் அழைக்கப் படுவான். இத்தகையத் தீயோரையும் நல்லோரையுங் கண்டு திருத்த வேண்டியதே கற்றவர்ச் செயலாகும். அங்ஙனமின்றித் தன்னை உயர்ந்தவ் னென்று ஒருவன் கூறுவதும், மற்றொருவன் அவன் கூறுதலை மெய்யென்று நம்பி அவனை உயர்த்திவிடுதலும் கல்லார் செயலாகும். பிரம்மா முகத்திற் பிறந்த பிராமணனுக்கு மண்ணிற்பிறந்த பாப்பானவர் ஆசீர் கனந் தருமோ. கல்லார் செயலாகும் ஆசீரும், உயர்வில்லார் மொழி யாகும் பொய்ம்மொழியும் ஒருக்காலும் சிறப்படையாதென்பது துணிபு. சாதிபேதமில்லா முழுக்கிறிஸ்தவர்களே, சற்று கவனியுங்கள். நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தார் ஜனத்தொகை எடுக்கத் தோன்றியுள்ளாரன்றி அவர்களுக்கு சாதித் தொகை அவசியமன்று. இதையடுத்தே முன்பெடுத்துள்ள சென்சஸ் ரிப்போர்ட்டர்கள் யாவரும் இந்து தேசத்திலுள்ளக் கிறிஸ்தவர்கள் யாவரையும் பொதுப்பட (நேட்டீவ் கிறிஸ்டியன்ஸ்) என வரைந்திருக்கின்றார்கள். கிறிஸ்தவப் பிரிவினைக் காரர்களுக்குக் கணக்கு வேண்டுமாயின் கத்தோலிக்குக் கிறிஸ்தவர்களென்றும், புரோடெஸ்டான்ட்கிறிஸ்தவர்களென்றும் கூறலாமேயன்றி இன்னசாதிக் கிறிஸ்தவன் இனிய சாதிக் கிறிஸ்தவனென வரைவதாயின், கிறிஸ்துவினது போதனைக்கும், செயலுக்கும் வழுவாகும். கிறிஸ்துவைக் கனஞ்செய்ய