பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

வைவான், பஞ்சபாதகர்களுக்கு பஞ்சசீலமுடையோர் விரோதிகளாகவே காணப்படுவார்கள்.

அதன் காரணம் அறிவுள்ளோர் நற்போதனை அறிவிலிகளுக்கு விரோதமாகவே தோன்றும். அறிவுள்ளோர்க்கு அவிரோதமாகவும், ஆனந்த மாகவுந்தோன்றும். அதற்குப்பகரமாய் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் எனும் தேசத்தில் தத்துவசாஸ்திரிகளும், சத்துவ சாஸ்திரிகளுமே விசேஷமா யிருக்கின்றார்கள். அத்தேசத்துள்ளோர் வீடுகளில் புத்த பிரானது சிலை யேனும், படமேனுமில்லாத வீடு கிடையாதாம். பகவன் மீது அவ்விவேக மிகுத்தோருக்குள்ள அன்பையும் மதிப்பையும் பாருங்கள் கற்றோரைக் கற்றோரே காமுறுவரென்னும் முதுமொழியை இதனாலுணரலாம்.

புத்தபிரானைப் பூஷிப்பவர்கள் பஞ்சசீல மிகுத்தோரும், அவரை தூஷிப்பவர்கள் பஞ்சபாதகர்களுமாக விளங்குகிறபடியால் அவர்கள் பாதகத் திற்குத்தக்க பவோ துன்பத்தைக் கூடியசீக்கிறம் அனுபவிப்பார்கள். ஓட்டின் வினை வீட்டைச்சுடுவதுபோல் மகாஞானிகளையும், அவர்களடியார்களையும் பஞ்சபாதக மிகுத்த வஞ்ஞானிகள் தூஷிப்பது தீவினைக்கடிப்படையாகும். அதின் பயனை கூடிய சீக்கிரத்துள் அவர்களே அநுபவிப்பார்கள். தன்மப் பிரியர்களும், சத்தியதன்மப் போதகர்களும், மெய்ப்புலவர்களும் அசத்தியர் களாகும் அஞ்ஞானப் பத்திரிகைகளையும், அஞ்ஞானிகளையும் பாராதிருக்க வேண்டுகிறோம்.

- 4.17; அக்டோபர் 5, 1910 -

58. மாமாத்திரரும் காமாத்திரரும்

கோலார் அச்சுதானந்தமென்னும் அன்பரே, தாம் வினாவிய சங்கை வீணேயாம். விசேஷமாயின் பலருக்கும் பயன் தரும். இஃது பயனற்றதாதலின் சுருங்கச் சொல்லி விளங்க வைப்போமாக.

ஆதியில் புத்தபிரான் ஓதியுள்ள தன்மங்களிலேனும், ஓடதிகளிலேனும், மாமிஷங்களைப்பற்றிய மொழியைப் பகர்ந்துளராவென விசாரித்து விச்சங் கையை வினவவேண்டியதாகும். அவர் காலத்திய தன்மபோதத்தில் உயிர் வதையையும், மாமிஷத்தையும் அகற்றியிருக்க தற்காலத்தோர் கூற்றை அவரது தன்மத்தின் மீதேற்றி வினாவுதல் வீணதாகும்.

தற்காலந் தோன்றியுள்ள மாமாத்திரர்கள் கொண்ட மாமிஷ இச்சையின் தந்திரவுபாயங்களாகும், அதாவது மாமிஷம் புசிப்போர் மூப்படைந்து தந்தங்கள் உதிர்ந்தபோது மெதுவாயமாமிஷங்களை விரும்புவது அவர்கள் சுபாவமாகும் அத்தகையோர் விருப்பத்தை தங்கள் விருப்பமெனக் காணாது தங்கள் தேவனுக்கு தலையீற்றுக் கன்றுகுட்டியும், தலையீற்று ஆட்டுக் குட்டியும், தலையீற்றுப் புறாக்குஞ்சியும் கொண்டுவந்து செலுத்துங் கோளெனக் கூறுவர். குருக்களாயுள்ளவர்கள் மற்றவர்களை நோக்கி எனக்குப் பல்லில்லை இளந்தையானக் குட்டி மாமிஷங்களைக் கொண்டுவாருங்கோ ளென்றால் கொண்டு வருவார்களோ. ஒருக்காலும் வரமாட்டார். அவ்வகைக் கூறாது தங்கள் தேவனுக்கு கொண்டுவாருங்கோளென்றால் கூறியவுடன் கொண்டுவரத் தடையிராது. அதுகொண்டு பல்லில்லாதவர்கள் புசித்துப் பசிதீரும் ஈதோர் தந்திரமாகும். அதுபோல் நோயுள்ளவர்களை மிரட்டி ஆடு சுத்தி விடவேண்டும் கோழி சுத்தி விட வேண்டும் என்று கூறுவது மதுமாமிஷப் பிரியர்கள் தந்திரமாகும்.

மற்றும் வைத்திய நூற்களில் சோற்றுக் கத்தாழைக்கு வெண் சேவலென்றும், கிலுகிலுப்பைச் செடிக்குக் கோழிப் பூண்டென்றும், நீலோற்பவத்திற்குப் பூனைக் கண்ணென்றும், கொசுக்கூட்டிற்கு யானைக் கண்ணென்றும் பரிபாஷையால் வரைந்திருக்கின்றார்கள்.

அதனதன் பொருள் பேதங்களையும் குணபேதங்களையும் கண்டு செய்வோரே மாமாத்திரராவர். மற்றுமுள்ள சீவகாருண்யமற்றோர் மாமிஷ இச்சா காமாத்திரரேயாவர். ஆதலின் சங்கை வினவுவோர் செல்காலம்,