பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

இத்தகையப் பிறவியிலுண்டாந் துக்கங்களையும், பிணியினால் உண்டாகும் துக்கங்களையும், மூப்பினால் உண்டாகுந் துக்கங்களையும் தனது கண்ணாறக்கண்ட சித்தார்த்தி சக்கிரவர்த்தியார் ஆணுக்குப் பெண்ணும், பசிக்குப் புசிப்பும், தாகத்திற்கு நீரும், கோபத்திற்கு சாந்தமும், சூட்டிற்குக் குளிர்ச்சியும் எதிரடையாயிருப்பதுபோல் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்குவகை துக்கநிரோத வழிகளுக்கும் எதிரடையாய சுகமொன்றிருத்தல் வேண்டும். அத்தகைய சுகவழியைக் கண்டறிவதே துக்க நிவாரணமார்க்கமென்று உணர்ந்து தனது ராஜ போகத்தைத் துறந்து பலப்பற்றுக்களை அறுக்கும் வழியிற் சிறந்து சருவ சீவர்களின் மீது அன்பு நிறைந்து அரசமரமென்னுங் கல்லாலமரத்தடியில் அமர்ந்து உலக பார்வையற்று உள்விழி பார்வையுற்று சகலமுந் தன்னுள் ளுணர்ந்து நித்தியானந்த நிருவாணம் பெற்று பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு துக்கங்களையும் ஜெயித்த வல்லபத்தால் காமதகனன், அகாலனென்னும் அரியபெயரேற்று தானே தானே கண்டடைந்த நித்தியானந்த சுக வழியை எண்ணருஞ் சக்கரவாளமெங்கனுமுள்ள மக்களுக் கூட்டி நித்தியானந்தமடை வதற்காக சங்கங்களை நாட்டி பொன் போலிலகு நெஞ்சம் பூரணநிலை பெறுதற்காய் மஞ்சளாடை அணிந்து அகங்காரமம காரங்களை அடக்கற்கு கரபோலாம் பிச்சாபாத்திர மீய்ந்து இராகத்துவேஷ மோகங்களற்று ஒருவேளை அன்னம் புசித்தொடுக்கச்செய்து தன்னைப்போல் இரவும் பகலும் விழித்திருக்கும் ஜாக்கிரநிலையில் விடுத்து சதாநிட்டையில் காமனையுங் காலனையும் செயிக்கு முத்திரைகளை அளித்து இளந்தை நீங்கி முத்தினான் முத்திபெற்றானென்னும் நிருவாணத்தில் நிலைக்கச்செய்து ஏழாவது தோற்றமாம் தேவகதியடைந்து உலகத்திலுலாவும் வரை உலாவி தாயினது வயிற்றிலிருந்து பிறந்த பிறப்பொன்றும், பிறவியை செயித்து தனது சிரசின்வழியே சோதிரூபமாக மாற்றிப் பிறக்கும் பிறப்பொன்றுமாய விருபிறப்பாளனென மாற்றிப் பிறக்கும் பிறப்பென்னும் பரிநிருவாணமுற்று என்றுமழியாது தான் அகண்டத்துலாவி நிற்பதுபோல் சங்கத்தைச் சார்ந்த சகலரும் தங்களில் சித்திபெற்று சதானந்தத்தி லயிக்கும்படி செய்திருக்கின்றார் சகல பற்றுக்களுமற்று தேவகதி அடைந்தவர் களை நிருவாணம் பெற்றவர் களென்றும், புளியம் வோடு வேறாகவும் பழம் வேறாகவும் புழுக்களின் கூடு வேறாகவும், விட்டில் வேறாகவும் பிரிவதுபோல் ரூபகாயத்தைவிட்டு தன்ம காயமாம் ஒளிமயமாக வெளிதோன்றி அகண்டத்துலாவுதலைப் பரிநிருவாணமென்றுங் கூறப்படும். இத்தகையப் பேரானந்த சுகநிலை அடைந்தவர்களையே பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்குவகைத் துக்கங்களை ஜெயித்தவர்களென்று கூறப்படும். இதுவே புத்ததன்மத்தின் சத்தியவழியும் முத்திப் பேருமாகும். இவற்றிற்கு மாறுபட்ட மற்ற பேதங்கள் யாவும் அசத்தியமும், அசப்பியமுமேயாம்.

- 5-1; சூன் 14, 1911 –

73. புத்ததன்ம முக்கியச் செயல் துக்கத்தைப் போக்கிக்கொள்ள வேண்டுமென்பதேயாம்

அத்தகையத் துக்கங்கள் யாதெனில், இம்மெய்யில் செய்துவந்த கன்மத்தை மறுமெயில் அனுபவிக்கும் பிறவியினாலுண்டாந் துக்கம் ஒன்று, பிணியினாலுண்டாந் துக்கம் ஒன்று, மூப்பினால் உண்டாந் துக்கம் ஒன்று, மரணத்தினாலுண்டாந் துக்கம் ஒன்று, இந்நான்கு வகையாலும் உண்டாம் துக்கங்களையே பகவன் நான்குவகை துக்க சத்தியமென்றும், நான்குவாய் மெயென்றுங் கூறியிருக்கின்றார்.
அவர் கூறியவற்றிற்குப் பகரமாக பிணி, மூப்பு, சாக்காடென்னும் துக்கங்களைக் கண்டே துறவு பூண்டு நான்குவகைத் துக்கங்களையும் செயித்து நிருவாணமாம் நித்தியானந்தம் பெற்று தானேதானே மெய்ப்பொருளென்னும் புத்தராகி தானடைந்த சுகத்தை தன்மட்டிலும் அநுபவித்துப்போகாது உலகில் தோன்றியுள்ள சருவ மக்களுக்கும் விளக்கி நித்தியானந்தம் பெறச் செய்வதற்காய் உலகெங்கும் சத்திய சங்கங்களை நாட்டி என்று மழியா நித்திய நிலையில்