பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /63

சிலாலயத்தை உண்டு செய்து அதனுள் ஆண்குறி பெண்குறி என்ற சிலைகளை அடித்து வைத்து மவைகளை பூசிக்கும்படி செய்து அவர்கள் மனவேஷ்டையை மாற்றி உற்சாகத்துடன் தொழுவதற்கு மிருகண்ட முநிவனொருவனிருந்தான். அவனுக்கு மார்கண்டனென்னும் ஓர் மகன் தோன்றி இலிங்கமென்னும் ஆண்குறி பெண்குறியைத் தொழுது என்றும் பதினாறு வயதைப்பெற்று சிரஞ்சீவியா இருக்கின்றான். ஆதலால் இலிங் கப்பூசை செய்வதால் சுகமுண்டாமென்னுஞ் சிலக் கற்பனா கதைகளை உண்டு செய்து காமிகார்ச்சனையைத் திடப் படுத்தியுள்ளார்கள்.
அதற்கு ஒட்டுக்கதை மார்கண்டாயுசாக வாழக்கடவாயென்னும் ஒரு வாழ்த்தலையும் சேர்த்துக்கொண்டார்களன்றி வேறொரு காட்சியுங் கிடையாவாம்.
ஈதன்றி பிரமலோகத்திற்குப் போய் வேத வியாசருடன் சம்பாஷிக்கத்தக்க யோக்கியதையுடைய மிருகண்டருக்குப் பிள்ளையில்லாது தபஞ்செய்தா ரென்றால், அவர் பிரம்மலோகஞ் சென்றாரென்பதே பொய்யாக முடியும். அத்தகைய என்றும் பதினாரென்னும் வயதைப் பெற்றவன் உலக தோற்றத்து ளொருவனாக தோன்றாதது கொண்டு அதுவும் பொய்யேயாம் என்றும் பதினாறென்னும் வயதைப் பொருந்தியது தேகமேயாதலின் அத்தேகம் தோற்றத்திலிருத்தல் வேண்டும். தபோபலத்தால் உதித்தப் பிள்ளைக்கு பதினாறு வயதைக் கொடுத்துவிட்டு அதை மறந்து இயமனை எட்டியுதைத்து என்றும் பதினாறு வயதைக் கொடுக்கக்கூடியவருக்கு தான் முன்பு கொடுத்த வயதை மறந்தது திரிகாலமறியா வஞ்ஞானமென்றே விளங்குகிறபடியால் இதன் சங்கையை வீணில் வளர்ப்பது அவலமென் றெண்ணி இம்மட்டும் நிறுத்துகின்றோம்.

- 5:8; ஆகஸ்ட் 2, 1911 -
 

83. இனிவரும் பிறப்பென்றாலென்னை

எனுங் கடாவில் தன்னிலைச்சுட்டொழிந்தும் முன்னிலைச்சுட்டொழிந் தும் எப்பிறப்பென் றெதிர்வினாத் தோன்றலின் மாற்ற முரைக்க மயக் குற்றதாகும். கடாவிய கடாவல் மக்களென்றாயின் கன்மமே மக்களுருவெனத் தோற்றலும் மக்களே கன்மத்தாற் சுழலலு மியல்பாதலின் இனிவரும் பிறப்பும் மக்களேயாம்.
உடலெடுத் துலாவுவதே கன்மமென்னப்படும் கன்மத்தின் ஏதுவாந் தோற்றமே உடலென்னப்படும் உடலுங் கன்மமும் ஒன்றித்துத் தோன்று மளவும் பிறவியுண்டாம். உடலுங் கன்மமும் ஒழிந்தவிடத்துப் பிறப்பற்றுப் போம். பிறப்பிறப்பற்று இரவுபகலற்ற சதா விழிப்பும் சதானந்தமுமான அநித்திய வனாத்தும நிருவாணநிலை பெறுவன்.
புளியம்பழம் போலும், ஓடுபோலும், புழுப்போலும் விட்டில் போலும் இருபிறப்பாளனென மாற்றிப்பிறக்கும் பரிநிருவாணம் பெற்று சோதியுருவாய் அகண்டத்துலாவுவர்.
இதனந்தரார்த்தமுஞ் செயலும் அந்தர்முக சாதனர்க்கு விளங்குமேயன்றி பகிர்முகப் பேச்சுளார்க்கு பற்றற விளக்கினும் விளங்கவே விளங்காவாம்.
காரணமோவென்னில் விதரண விருத்தியில், விட்டவனும், வித்தியா விருத்தியில் விட்டவனும், கலை நூல் கற்றுவிட்டவனும், கைத்தொழில் செய்துவிட்டவனும் இம்மெய்யகன்று மருமெய் தோன்றியவிடத்து விட்ட கன்மத்தையே தொடர்ந்து நிற்ப தியல்பாதலின் ஞானநிலையும், ஞானசாதனமும், ஞான சிறப்பும் அங்கங்கு விட்டவர்க்கே விளங்குமன்றி ஏனையோர்க்கு விளங்காதென்பது திண்ணம்.
கன்மம் உள்ளவரையில் ஜென்மமும், ஜென்மம் உள்ளவரையில் கன்மமும் உள்ளதென்பது கன்மச்சக்கர விதியாதலின் அவனவன் விட்ட குறையே கன்மமெனச் சென்று ஜென்ம தோற்றமடைகின்றது. அத்தகையத்