பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

பெயர் மாறுதலடைவதுபோல் தெய்வநிலையுடன் பேயநிலை கலந்தபோது தெய்வமென்னும் சிறப்பு மற்றுப்போம். மக்களிடமே தெய்வநிலையும் பேயநிலையுந் தோற்றுதலுள்ளபடியால் தனியாயுள்ள ஓர் தெய்வத்தைத் தனியாயுள்ள ஓர் பேய் ஏய்த்ததென்பதும் நடனமிட்ட தென்பதுங் கற்பனா கதைகளேயாம்.

- 5:11 ; ஆகஸ்ட் 23, 1911 –
 

86. சாக்கைய பெளத்த சோதிரர்களே சற்று கவனியுங்கள்

பஞ்சசீலம் பெற்றவர்களாகிய தாங்கள் பஞ்சபாதகர்களை அணுகாமலும், அவர்களுழ்க்காரு மிடங்களில் உழ்க்காராமலும், அவர்கள் நிற்குமிடங்களில் நிற்காமலும் தங்கடங்கள் பெற்றுள்ள சீலத்தில் நின்று சீர்பெறும்படி வேண்டுகிறோம்.
சில அஞ்ஞானிகள் தங்களுக்குள்ள அசத்தியச்செயலாலும், அசப்பிய மொழியாலும் பௌத்தர்களை தூஷிப்பதுடன் பத்திரிகைகளிலும் வரைந்து தங்கள் மதமே மதம், தங்கள் தெய்வமே தெய்வமெனக்கூறிப் படாடம்ப மடித்து கேட்டின் வாசலைப் பெரிதாக்கி நடக்கின்றார்கள். தாங்களோ கொலை செய்யலாகாதென்னும் இடுக்கவாசலிலும், பொய் சொல்லலாகாதென்னும் இடுக்கவாசலிலும், களவு செய்யலாகாதென்னும் இடுக்கவாசலிலும், விபச்சாரஞ் செய்யலாகாதென்னும் இடுக்கவாசலிலும், மதியை மயக்கும் மதுபான மருந்தலாகாதென்னும் இடுக்க வாசலிலும் நடப்பவர்களாதலால் தாங்களொவ் வொருவரும் கேட்டின் வாசல் வழிச் செல்லும் கொலைப்பாதகர் கூட்டத்திலும், கேட்டின் வாசல் வழிச்செல்லும் பொய்யர்கள் கூட்டத்திலும், கேட்டின் வாசல்வழிச்செல்லும் கள்ளர்கள் கூட்டத்திலும், கேட்டின் வாசல்வழிச் செல்லும் விபச்சாரர்கள் கூட்டத்திலும், கேட்டின் வாசல் வழிச்செல்லும் குடிகேடர் கூட்டத்திலும் அணுகாமலிருப்பதே அழகாம். அவர்கள் பத்திரிகைகளில் வரையும் அசப்பியக் கடிதங்களுக்கு பதிலெழு தாமலிருப்பது அதனினும் அழகேயாம்.
தாங்களோ துன்மார்க்கர்கள் மத்தியில் நன்மார்க்கர்களாகவும், விரோதிகள் மத்தியில் அவிரோதிகளாகவும், அஞ்ஞானிகள் மத்தியில் ஞானி களாகவும், கோபிகள் மத்தியில் சாந்தர்களாகவுமிருக்க வேண்டுகிறோம்.
விரோதத்தை விரோதத்தால் வெல்லுவது மேலுமேலும் விரோதத்தைப் பெருக்கிவிடும். விரோதத்தை சாந்தத்தாலும், அன்பாலும் வெல்லவேண்டும். அதனால் நமக்கு ஆறுதலும் சுகமுமுண்டாம். பௌத்தர்களை கெடுக்க முயல்பவன் தானே கேடடைவான். பெளத்தர்களைத் துன்பஞ்செய்ய முயல்பவன் தானே துன்புறுவான். ஆதலின் பௌத்த சோதிரர்கள் யாவரும் உண்மெயில் அன்பை வளர்த்தும்படி வேண்டுகிறோம். உண்மெயில் சாந்தத்தை நிறப்பும்படி வேண்டுகிறோம். உண்மெயில் ஈகையை நிலைபெறச் செய்யும் படி வேண்டுகிறோம். இதுவே பௌத்தர்களின் செயலும், இதுவே பௌத்தர் களின் கொள்கையும், இதுவே பெளத்தர்களின் கடைபிடியு மென்னப்படும்.
பெளத்தர்களென்னும் சீலம் பெற்று அபுத்தர்களிடம் வாதிடுவதாயின் சீலமற்றுப்போம். அவ்வகை சீலமற்று அசீலர்களாகுவதினும் அமைதியுற்று கால நேர்ந்தபோது அவர்களுக்கு சாத்தியதன்மத்தை விளக்குவது அழகாம். அங்ஙனமின்றி பாலூட்டுங் குழவிகளுக்கு சோறூட்டுவது போல் நூதன விவேகிகளுக்கு நுண்ணறிவூட்டுவதொக்கும். ஆதலின் சகோதிர வைக்கிய மற்றவன் நெஞ்சர்களிடம் வாதிடாமலிருக்க வேண்டுகிறோம். வேண்டுகிறோம்.

- 5:11 ; ஆகஸ்ட் 23, 1911 -
 

87. மறுபிறப்பு

வினா : உலகத்தில் தோன்றும் ஒவ்வொரு தோற்றமும் பூதியங்களின் சத்தால் தோன்றுகின்றனவென்பது பிரத்தியட்சம். அவ்வாறு தோன்றும் சிற்சில தோற்றங்களுள் தத்தமது அவயவங்கள் பின்னப்படுதற்கு சேர்க்கையின் பேதமே காரணமென்று துணிதற்கு தத்துவ சாஸ்திரங்களிடந்தரும். ஆதலின்