பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /67

இஃதை பூர்வீக பாபஜனன மென்பதற்கு எமது சிற்றறி விடந்தரவில்லை. மாந்தர்க்கு ஜனனமுண்டென்பது பெளத்தமத கொள்கையாயினும் பெளத்தமத சார்பினராகிய சிவவாக்கியர் 'கறந்தபால் முலைபுகா' என்னும் பாடலில் "இறந்தவர் பிறப்பதில்லை இல்லையே" என்றும்,

ஞானவெட்டி


இருவினையுந் தனையுரைத்து உலகத்தாசான் இறந்தவுடன் விழுந்தாவிப் பிரிந்தப்பின்பு
வருஜனன மாகிவந் துடலெடுத்து வாழ்புவியில் வருமென் றுருதிச்சொல்வார்
குருவறிந்து புவியில் வந்து வயது நூறு குறிப்பாகப் பிறந்திறந்தால் குழவியாமோ
அருமெயுட னற்பிறவி பிறப்பாரென்று அதீத வெகு பொருளெல்லாம் பரிப்பாரையோ.

இத்தகைய பாடலால் மாந்தர் இறந்த பின் மீண்டும் பிறப்பாரென்பது அநுபவ விரோதமாய் தோற்றுகிறபடியால் கிருபைக்கூர்ந்து எம்மீது குற்றம் பாராது கருடனைக்கண்ட சர்ப்பம் போல் எமக்குற்ற சங்கை நீங்கவேணுமாய் தங்களது திருவாக்கை எதிர்நோக்கும்.

பி.எம். ராஜரத்தினம் பிள்ளை , சாம்பியன் ரீப்ஸ்.
- 5:13 ; செப்டம்பர் 6, 1911 –

விடை : தாம் வினாவிய சங்கை மிக்க விசேஷித்ததேயாயினும் அவரவர்கள் இயற்றியுள்ள செய்யுட்களின் அந்தரார்த்தங்களையுந் தோற்றவேதுக்களையுங் கண்டு தெளிந்துக்கொள்ளும்படி வேண்டுகிறோம். அதாவது பௌத்தர்கள் போதிக்கும் பிறவிக்கும் பொய்க் குருக்கள் போதிக்கும் பிறவிக்கும் அனந்தம் பேதமுண்டு, பௌத்தர்கள் அவாவாம் கன்மமே பிறவிக்கேதுவென்று கூறுவர். பொய்க்குருக்களோ உருவத்தைச் சுட்டி உன்தாய்தந்தையரே மறுபிறவியெடுத்து வருவார்கள், அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய பொருளுதவிகளை எங்களுக்குக் கொடுங்கோளென்று பொருள் பரிப்பர்.
இதை அநுசரித்தே சிவவாக்கியர் இறந்துபோன மானிடரினி பிறப்பதில்லையே என்றும்;

உடலுயி ரெடுத்ததோ உயிருடம்பெடுத்ததோ / உடலுயி ரெடுத்தபோது உருவமேது செப்பிடும்

என்றும் பாடியிருக்கின்றார். ஞானவெட்டியில் பொய்க்குருக்களின் செயலும் போதனையும் இத் தன்மைத்தென்று கூறியுள்ள பாடலை மட்டிலும் எழுதியுள்ளீரன்றி சாம்பவனார் போதித்துள்ள 373, 384-வது பாடல்களை நோக்காது விட்டது கவலையேயாம்.
ஈதன்றி சுவாசக்குறைவு நிறைவாலும், தத்துவக்குறைவு நிறைவாலும் ஊனப்பிறப்பு ஊனமற்றப் பிறப்புத் தோன்றுவதென தத்துவ நூற்கள் கூறினும் சுவாசங்குறைந்தோடுதற்குங் கன்மமே ஏதுவென்னப்படும். சுவாசம் நிறைந் தோடுதற்குங் கன்மமே ஏதுவென்னப்படும். தத்துவங்குறைந் தமைவதற்கும் கன்மமே ஏதுவென்னப்படும். தத்துவம் நிறைந்தமைவதற்கும் கன்மமே ஏதுவென்னப்படும். கன்மமின்றி ஜென்மமில்லையென்பதும், ஜென்மமின்றி தோற்றமில்லை யென்பதும் பெளத்ததன்ம மந்திரவாதிகளின் துணிபாதலின் ஜெநந்தோற்றங்களை அதனத னுருவாலும், உள்ளச்செயலாலும் யூகித் துணர்ந்துக்கொள்ள வேண்டியதேயாம்.

- 5:14 ; செப்டம்ப ர் 13, 1911 -
 

88. பெளத்த சிகாமணிகளே!

சற்று செவிசாய்ப்பீர்களாக. உலகத்தில் தோன்றியுள்ள சகல மக்களாலும் சிறப்புறக் கொண்டாடப்பெற்றிருந்த இவ்விந்திரர் தேசமானது நாளுக்குநாள் இழிந்த தேசமென்று சீரழியத்தக்கப் பெயரில் வருகின்றது.
காரணமோவென்னில், பொய்வேதங்களும், பொய் வேதாந்திகளும், பொய்ப்புராணங்களும் பொய் புராணிகர்களும், பொய் மதங்களும், பொய் மதாச்சாரிகளும், பொய் சாதிகளும், பொய்ச் சாதியோர்களும், பொய் வித்துவான்களும், பொய்ப் பிரசங்கியார்களும், பொய் தெய்வங்களும், பொய் தெய்வந் தொழுவோர்களுமாகிய அசத்தியர்களும், அசப்பியர்களும் பெருகிக்கொண்டே வருகின்ற படியால் சன்மார்க்கமாகிய புத்ததன்மம் நாளுக்கு நாள் நிலைகுலைந்து பௌத்தர்களும் பலவகையால் தாழ்ச்சியடைந்து