பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

அதாவது மணப்பந்தலில் மொய் மொய் என வழங்கு மொழியானது மொய்யுங்கோள், கூடுங்கோள், சேருங்கோளென்னும் ஏவல்மொழியாகும். அஃதை குறுக்கல் விகாரத்தால் மொய் மொய்யென வழங்கி வருகின்றார்கள். அவ்வகை மொய்த்தலுங் கூடுதலும் சேருதலுமாகியக் கூட்டம் யாதுக் கென்னில் மணமகனுக்குரியவர்களும், மணமகளுக்குரியவர்களும் "மொய்யலோர் உதவியென” அதாவது வந்துள்ளக் கூட்டத்தோர் உதவி எனத் தங்களாலியன்ற பத்து பணமோ, இருபது பணமோ மொய்யக் குவிக்கவும், அதை மணமகன் சார்பினரும், மணமகள் சார்பினரும் எழுதி வைத்துக் கொண்டு மேற்கூறியபடி உதவிபுரிந்தோர் வீடுகளில் வதுவை நிறைவேறுங்கால் அவரவர்கள் அளித்துள்ளத் தொகைகளை இவர்கள் மொய்த்து உதவி புரிவதியல்பாம். இத்தகைய உதவி கலியாணஞ் செய்து கொண்ட மக்கள் கடனில்லாமல் வாழ்கவேண்டுமென்பதற்கேயாம். அத்தகைய மேலாய பழக்கம் டம்பத்தாற் கெட்டு பாழடைந்து போய்விட்டது.
பட்டம் பட்டமெனப் பொன் தகடை நெற்றியிற் கட்டுவது பௌத்த மார்க்க அரசர்கள் பதிநெட்டு விருதுகளின் ஓர் சின்ன மென்னப்படும். வெள்ளை யானை, வெள்ளைக்குதிரை, வெண் குடை, வெண் சாமரை, வெள்ளை யங்கி, வெண் பிறமுடி, வாகுவல்லயம், நெற்றிச்சிட்டியாகிய சின்னங்களுடன் பட்டங்கட்டுவதும் பூர்வ பெளத்தமார்க்கச் சின்னங்களில் ஒன்றென்பதேயாம். இதை அநுசரித்தே ஞானவெட்டியின் ஆக்கியோன் திருவள்ளுவ சாம்பவனர் "சாம்பவ மூர்த்தியர்க்கே பட்டங்கட்டிய சாம்பவனான்காணும்' எனவும் வரைந்துள்ளவற்றா லறியலாம்.

- 5:32 ; சனவரி 17,1912 -
 

95.பௌத்த பிரசங்கிகளுக்கோர் விண்ணப்பம்

சகோதிரர்களே! புத்தமென்பது மெய்கண்டநிலை, பெளத்தமென்பது மெய்காண முயல்வோர் நிலை. அபுத்தமென்பது பொய்யர்நிலையாதலின் இவற்றை ஒவ்வோர் சத்தியதன்மப் பிரசங்கிகளும் சீர்தூக்கிப் பிரசங்கிக்கும்படி வேண்டுகிறோம். அதாவது அகிம்சை அகன்றவிடத்து காருண்யந்தோன்றும், பொய்யகன்ற விடத்து மெய்தோன்றும், சிற்றின்பம் அகன்றவிடத்து பேரின்பந்தோன்றும், மயக்கம் அகன்றவிடத்துத் தெளிவு தோன்றும், பொருளாசை அற்றவிடத்து சுகநிலை தோன்றும். பஞ்சசீலம் பெற்ற பாக்கியவான்கள் பிரசங்கிகளாகத் தோன்றிய போது அப்பிரசங்கத்தின் சுவையைக் கேட்போர் சுவைத்து நீதி நெறியில் நிலைப்பதே நித்தியானந்த மாதலின் சகல சமயங்களுக்கு ஆதியும் சருவ மதங்களுக்குப் பீடமுமாய சிறந்த சாத்திய தன்மத்தைப் பிரசங்கிப்போர் கிஞ்சித்தேனும் சிறந்த நிலையில் நிற்றல் வேண்டும். அங்ஙனமிராது தெய்வப்புலவர் நாயனார் கூறியுள்ளபடி "ஓதியுணர்ந்தும் பிறர்க்குறைத்துந் தானடங்காப்பேதையிற் பேதையாரியல்" எனும் பேதையினும் பேதையர்களாவாராயின் அன்னோர்ப் பிரசங்கமும் பயனைத்தராவாம் மாட்டிறைச்சியையும் பன்றியினிறைச்சியையும் கொழுக் கத்தின்று சாராயத்தைப் பூராயருந்துவோர் தாங்களும் மதுவிலக்கச்சங்கத்து அதிபர்களென வெளிதோன்றுதல் போல் தங்களுக்குள்ள காமியம், பொறா மெய், கோபம், குடிகெடுப்பு, டம்பம் முதலிய துற்குணங்களைப் போக்க வியலாது, ஏனையோர் துற்குணங்களைப்போக்கும் பௌத்தப் பிரசங்கிகளென வெளிதோன்றுவது வீணேயாம். புத்தன்மமானது நீதிமார்க்க வழியும், அதன் போதகர்கள் நீதிமார்க்க வழிகாட்டிகளுமாதலின் நீதியற்றோருக்கு வழி காட்டுவோரே கோபமிகுத்த வழியிலும், காமியமிகுத்த வழியிலும், வஞ்சினமிகுத்த வழியிலும், பொறாமெமிகுத்த வழியிலும், டம்பமிகுத்த வழியிலும் நடப்பதாயின் தாங்கள் போதிக்கும் நீதிமார்க்க வழிகளுங் கெட்டுத் தாங்களுங் கேடடைய வேண்டிவரும். ஆதலின் சாத்தியதன் மத்தைப் போதிக்கும் அன்பர்கள் சாத்திய தன்மத்தில் நடந்து போதிப்பதாயின் தன்மமும் சிறப்பைப் பெறும். தாங்களும் அழியா சிறப்பைப் பெறுவார்கள் என்பது சாத்தியம். புத்ததன்மம் பரவற்கு வேணப் பொருளுதவி செய்யும் பெரியோர்களும் நற்காட்சி