பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

இவற்றுள் பூர்வ திரிரத்தினங்களைத் தெரிந்துகொண்ட நீவிர்பஞ்ச பாதகங்களை அகற்றி சருவசீவர்களுக்கும் நன்மெய் புரிவீராக. அன்றேல் சருவசீவர்களுக்கும் அன்பராக விளங்குவீராக.

- 5:50 ; மே 22, 1912 -
 

97. விவாகக் கிரியை

வினா : நமக்குள் நிகழ்ந்துவரும் விவாகங்களை சகல மாதங்களிலுஞ் செய்யலாம். ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் செய்யலாகாதென நீக்கி வருங் காரணமென்னை, இரண்டாவது புத்தமெனத் தோன்றிய மொழிக்கு அபுத்தமென்னு மொழிதோன்றற்கு விதியென்னை.

- 5:50 ; மே 22, 1912 -

விடை : அன்பரே! தாம் வினவிய சங்கை தற்காலமதஸ்தர் முன் விசேஷமாக விளங்கினும் பௌத்ததன்ம காலத்தில் அநுபவக் காட்சியாக நிகழ்ந்துவந்தவைகளாகும்.
அதாவது விவாகக் கிரியைகளை தாராபலன், சந்திரபலனைக் கொண்டும், புருடன் பிறந்த நட்சத்திரம், பெண் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டும், புருடன் பெயர் பெண் பெயரைக்கொண்டும், முகூர்த்தகாலம் கணித்து எம்மாதங்களிலுந் தடையின்றி செய்யலாம். பனிரண்டு மாதங்களிலும் பொது வாய முகூர்த்த காலங்களுண்டு அவற்றுள் ஆடி, புரட்டாசி, மார்கழி மாத மூன்றில் மட்டும் விவாகங்கள் தடைபட்டு வந்தக் காரணங்கள் யாதென்பீரேல் இத்தேசமெங்கும் புத்தன்மம் பரவி இந்திர விழாக்கள் கொண்டாடி வந்த காலத்தில் ஆடி மாதம் அறச் செல்வியாம் அம்பிகா தேவியின் பரிநிருவாணத்தைக் கொண்டாடுங் காலமும் புரட்டாசி மாதம் மாவலி சக்கரவர்த்தியின் பரிநிருவாணத்தைக் கொண்டாடும் காலமும் மார்கழி மாதம் சருவசீவ தயாபரனாம் புத்தபிரானின் பரிநிருவாணத்தைக் கொண்டாடுங் காலமுமாதலான் அவைகளின் உற்சாகத்தை தங்கடங்கள் விவாகங்களினு மேலாகக் கொண்டாடற்கு அம்மூன்று மாதத்திலும் தங்கள் விவாக சந்தோஷங்களைக் கொண்டாடாமல் தேவர்களின் பரிநிருவாண சந்தோஷத்தை விசேஷமாகக் கொண்டாடி நித்திய சுகமாம் நிருவாண நிலையை மறவாது பற்றறுக்குங் கியானசக்த்தியை வளர்த்து வந்தார்கள்.
உலகத்திற்கே முதற் சீர்திருத்தக்காரர்களும் ஏழாவது தோற்ற தேவர்களில் ஆதியானவர் களுமாதலால் அவர்களது இருபிறப்பாம் பரிநிருவாண காலத்தை விசேஷமாகக் கொண்டாடற்கு ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் எவ்விஷய சுகத்திற்கும் பிரவேசியாது ஆதி தேவர்களின் சிறப்பையே கொண்டாடி வந்த அனுபவமானது நாளதுவரையில் நிறைவேறி வருகின்றது.
புத்தம், அபுத்தமென்னு மெதிர்மறைப் பகுபதமொழியானது வடநடை பகுபதமாகும். அதாவது மொழிமுதற்கண் ஒற்றுளவாயின் அவ்வும், உயிருளவாயின் அன்னும் இருவகை மொழிக்கு நிருவும் புணர்ந்து பொருளின் மெயும் பிறிதுமில்லா எதிர்மறையுங்காட்டும் வடநடை பகுபதங்களாம். உதாரணம், சயமிலான், அச்சயன் நீதியற்றவை, அநீதி, மலமற்ற, அமல, சீரணமற்ற, அசீரண, தருமமில்லான், அதருமன், துவிதம், அத்துவிதம் என வருவதுபோல், புத்தம் இன்மெயாயின் அபுத்தமென்னுமொழி தோன்றுவதியல்பாம்.

- 6:1; சூன் 12, 1912 –
 

98.சுடலைச் சடங்குகள்

வினா : ஐயா சென்றவாரம் நமது பத்திரிகையில் ஓர் பர்மிய பவுத்த குருவின் மரணத்தைத் தெரிந்து மிக்க விசனமுற்றோம். அதிலுண்டாகிய சங்கைகள் சில துண்டு. அதாவது பெளத்தகுருவென்றால் பிணி, மூப்பு, மரணத்தை ஜெயித்துக் கொண்டவரா, ஜெயிக்காதவரா, அவரது காலின் பெருவிரல் கட்டியது அவர்கள் தேசவழக்கமா, நமது தேசவழக்கமா. நமது