பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மெய்ப்பு பார்க்கும் பொழுது ஏதோ ஒரு சிக்கல்

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /77 விடை : புருசீகர்களின்னாட்டுள் குடியேறி அதிபயத்துடன் பிச்சையேற்றுண்டவர்கள். அறஹத்துக்களாம் அந்தணர்போல் வேடமிட்டுக் கல்வியற்றக்குடிகளை ஏய்த்து அதிகாரத்துடன் பிச்சையேற்க ஆரம்பித்த போதினும் விவேகமிகுத்த திராவிடர்களால் துரத்தப்பட்டு பெயரூரில்லாமலே போயிருப்பார்கள். இதன் மத்தியில் இத்தேசக் குடிகளாகும் ஆந்திரர், கன்னடர், மராஷ்டர்களில் சில சோம்பேறிகளும், வஞ்சகர் களுந்தோன்றி புருசீகர்கள் போட்டுள்ள பிராமண வேஷமானது பெண்டுக ளுடன் சுகித்துக்கொண்டே சுகபோசனஞ்செய்தற்கு எளிதாயிருந்தபடியால் தாங்களும் பிராமண வேஷமணிந்து கொண்டு அதிகாரப்பிச்சையேற்றுண்ண ஆரம்பித்துக் கொண்டதுடன் "வள்ளுவர் சாக்கையரெனும் பெயர் மன்னர்க்குள் படு கருமத்தலைவர்க்கொக்கும்" என்னுந் திவாகர விதிப்படி அரசர், வணிகர், வேளாளரென்னும் முத்தொழிலாளருக்குங் கருமத்தலைவர்களா யிருந்து வள்ளுவர்களால் நாடாத்தி வந்த தன்ம கன்மத் தொழில்களையுங் கைப்பற்றிக் கொண்டார்கள். விசாரணையில்லா சிற்றரசர்களும் கல்வியில்லாப் பெருந்தொகைக் குடிகளும் வேஷப்பிராமணர்களுக் குட்பட்டுவிட்டார்கள். விவேகமும் விசாரணையும் மிகுத்த திராவிடர்கள் குறைந்தும் எடுத்த முயற்சிகள் கைகூடாதுந் திகைத்த காலத்தில் பழயவேஷப்பிராமணர்களும் புதுவேஷப் பிராமணர்களுந் தங்கள் தங்களைச் சார்ந்தக் கல்வியற்றக் குடிகளால் வேஷப்பிராமணத்தைக் கண்டித்திருந்தோர்களைத் துன்பஞ்செய்யவும் அவர்களைத் தலையெடுக்கவிடாது நசிக்கவும் தேசத்தைவிட்டகற்றவும் ஆரம்பித்துக் கொண்டபடியால் கல்வியும் வல்லபமும் மிகுத்த திராவிடர் களின் வலுவுகுன்றி நீதியும், நெறியும், வாய்மையும், முயற்சியுமற்று அசத்தியமும் அசப்பியமும் பெருகி சகல விருத்திகளுங் குறுகி தேசமும் பாழடைவதற் கேதுவாகிவிட்டது. மற்றப்படி பிராமணவேஷமிட்டப் புருசீகர்கள் மட்டிலும் இருந்திருப் பார்களாயின் விவேகமிகுத்த திராவிடர் களினால் அப்போதே துரத்துண்டு தேசம் இன்னும் சிறப்பைப்பெற்றிருக்கும். அவர்களுடன் இத்தேசத்தியச் சோம்பேறிகளும் பிராமணவேஷம் அணிந்து கொண்டபடியால் தேச உளவை அறிந்து பொய் வேதங்களையும் பொய்புராணங்களையும் அவரவர்கள் மனம் போனவாறு புதிப்பித்துக் கல்வியற்ற மக்களைக் கைவசப்படுத்திக்கொண்டதுமல்லாமல் தங்கடங்கட் பொய் வேஷங்களைப் பறைந்துவந்த விவேகமிகுத்த திராவிடர்களையும் மேற்கொண்டார்கள். இதுவே அவர்கள் ஜெயத்திற்குப் பீடமாகும். - 6:23; நவம்பர் 13, 1912 - 102. பரிதாபக் கொலை பரிதாபக்கொலை! பரிதாபக் கொலை!! பறையனென்றழைக்கப்பட்ட ஒருவனை சில ரெட்டிகளென்போர் சேர்ந்து கொலை செய்து விட்டார்கள் தென் ஆற்காடு டிஸ்டிரிக்ட் திண்டிவனந்தாலுக்கா விடலாபுர கிராமத்தில் ப. இராகவனென்னும் ஓர் குடியானவனிருந்தான். அவனுக்கோ கிஞ்சித்து தமிழ்வாசிக்க எழுதத்தெரியா விடினும் தன்பிள்ளைகளுக்குக் கிஞ்சித்துவாசிப்பை யூட்டி வைத்திருந்தான். அவனுக்குள்ள சிரத்தையால் சொற்பபூமிகளை சம்பாதித்து அவைகளில் உழைத்துவிருத்தி செய்துவரும் விஷயத்தில் மிக்க ஊக்கமுடையவனாய் இருந்ததுமன்றி அவ்வூர் ரெட்டிகளிடம் வேலைசெய்யும் ஏழைக் குடிகளுக்கு நாள் முழுவதும் வேலைவாங்கிக்கொண்டு ஓரணா கூலி கொடுப்பது வழக்கம். இந்த ராகவனென்பவனோ குலாபிமானத்தாலும் கருணைமிகுதியாலும் தன்னிடம் வேலைசெய்யும் ஏழைக் கூலிகளுக்கு நாளொன்றுக்கு இரண்டணா கூலி கொடுத்து வருவது வழக்கம். இதனால் முக்கியமான உழவு காலங்களில் கூலியாள்கள் யாவரும் இராகவனிடம் போய்விடுவதேயன்றி ரெட்டிகளிடம் போவது கிடையாதாம். இதேவிரோதத்தை ஆதாரமாகக் கொண்டு பறையனுக்குக் கொஞ்சம் பூமி விருத்தியாகிவிட்டபடியால் துட்டு கொழுப் பேறி இரண்டணா கூலி கொடுத்து வேலைக்காரரைக் கெடுத்துவிடுகிறா னெனப்