பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Qo مسW 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்: இராமனுக்கு முடி சூட்டாதபடி, மந்தரை என்னும் பெயருடைய கூனி, கைகேயியிடம் சென்று சூழ்ச்சியுரைகூறிக் கைகேயி மனம் மாறும்படிச் செய்தது பற்றியது. 3. கைகேயி தயரதனிடம் இரண்டு வரங்கள் பெற்று, இராமனைக் காட்டிற்குச் செலுத்தும்படியும், பரதனுக்குப் பட்டம் கட்டும்படியும் சூழ்ச்சியினால் தன் எண்ணத்தை முடித்துக் கொண்டது பற்றியது கைகேயி சூழ்வினைப் படலம். 4. நகர் நீங்கு படலம்: கைகேயி பெற்ற வரங்களின் படி, இராமன் அயோத்தி நகரைவிட்டு நீங்கிக் காடு ஏகியது பற்றியது. 5. சுமந்திரன் மீட்சிப் படலம்: தயரதன் கட்டளைப் படி, சுமந்திரன் காடேகிய இராமனைக் கண்டு நாட்டிற்குத் திரும்புமாறு வேண்டிக் கொண்டும் அவன் திரும்பாமையால் இவன் பயனின்றித் திரும்பி வந்ததைப் பற்றியது. 6. தயரதன் மோட்சப் படலம்: இராமன் நாடு திரும்பவில்லை என்பதை அறிந்ததும் தயரதன் உயிர் நீத்து வீடு பேறு அடைந்ததைப் பற்றியது. 7. கங்கைப் படலம்: இராமன் மனைவியுடனும் இலக்குவனுடனும் கங்கைக் கரையை அடைதல், முனிவர் கள் இவர்களை வரவேற்றுப் போற்றி விருந்தளித்தல்ஆகியவை பற்றியது.