பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 101

இரும்பு மனம்

உலகில் தமக்குப் பல பிள்ளைகள் இருப்பினும், அவர்களுள் கண்- கை- கால் ஆகியவற்றுள் ஒன்று குறைந்து ஊனம் உற்ற ஒரு பிள்ளை பிரிந்தாலும் பெற்றோர் தம் உயிரை விட்டு விடுவர். தயரதனோ, முடிசூட்டுக்கு உரிமை உடைய உயரிய ஒரு மகனைப் பிரியச் செய்ததால் அவன் மனம் இரும்போ என்கின்றனர் மக்கள்:

நிறைமக உடையவர் நெறிசெல் ஐம்பொறி குறைமகக் குறையினும் கொடுப்பராம் உயிர் முறைமகன் வனம்புக மொழியைக் காக்கின்ற இறைமகன் திருமனம் இரும்பு என்றார் சிலர்

(191)

மக்கள் வருத்தத்தால் தயரதன் மனம் இரும்பு எனினும், பல பிள்ளைகளுள் ஊனமுற்ற ஒரு பிள்ளை பிரியினும் உயிர் விடுபவர் போலவே, இராமன் பிரிந்ததும் தயரதன் உயிர் பிரிந்தான் என்பது ஈண்டு எண்ணத் தக்கது.

செவி சுடல்

கணவன் இராமன் முடியிழந்தான் என்பதற்காகவும் காடு செல்வான் என்பதற்காகவும் சீதை வருந்தவில்லையாம்; நான் சென்று வருகிறேன்- நீ அயோத்தியிலேயே இரு என்று சொன்ன கொடிய வெப்பமான சொல் சீதையின் செவியைச் சுட்டதால் தேம்பி அழுதாளாம்:

நாயகன் வனம் கண்ணல் உற்றான் என்றும்
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள்
'நீ வருந்தலை நீங்குவென் யான்' என்ற
தீய வெஞ்சொல் செவிசுடத் தேம்புவாள்

(218)

சொல் செவியைச் சுட்டதாம். அங்ங்னமெனில், தீய சொல் நெருப்பினும் கொடியது போலும். திருவள்ளுவரும் 'நாவினால் சுட்ட வடு' என- நாக்கி