பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 111.

தேவர்களைக் காப்பதற்காகச் சென்றனையோ? நீ சென்று விட்டது எதற்காக?- எனப் பரதன் புலம்புகிறான்.

செவ்வழி உருட்டிய திகிரி மன்னவ
எவ்வழி மருங்கினும் இரவ லாளர்தாம்
இவ்வழி உலகினில் இன்மை நண்ணினோர்
அவ்வழி உலகினும் உளர்கொலோ ஐயா!

(51).

பல்பகல் நிழற்றும் நின்கவிகைப் பாய் நிழல் நிற்பன பல் உயிர் உணங்க, நீ நெடுங்
கற்பக நறுநிழல் காத லித்தியோ?
மல்பக மலர்ந்ததோள் மன்னர் மன்னனே

(52)

இம்பர் நின்று ஏகினை இருக்கும் சார்பிழந்து
உம்பர் வந்து உன்கழல் ஒதுங்கி னார்களோ? சம்பரன் அனைய அத் தானைத் தானவர்
அம்பரத்து இன்னமும் உளர்கொலோ ஐயா?

(53)

பிறந்தாய் ஆதி

பரதன் வருத்தத்துடன் கைகேயியிடம் கூறுகிறான்: போகாத உனது உயிரைப் போக்கிக் கொள்வாயானால், உன் கெட்ட பெயர் மறையும்; அதாவது, நீ வேண்டுமென்றே பழி செய்யவில்லை; ஏதோ மறந்து தப்பித் தவறி செய்து விட்டாய் என உலகம் எண்ணும். இதனால், நீ உலகில் பிறந்த பயனும் அடைவாய். இது தவிர இப்போது உனக்கு வேறு வழியில்லை. நல்லோர் சொல்லும் உரையை நான் உனக்குச் சொல்கிறேன் என்கிறான் பரதன்:

சிறந்தார் சொல்லும் நல்லுரை சொன்னேன் செயல் எல்லாம் .
மறந்தாய் செய்தாய் ஆகுதி, மாயா உயிர் தன்னைத்
துறந்தா யாகின் தூயையும் ஆதி உலகத்தே - பிறந்தாய் ஆதி ஈதுஅலது இல்லைப் பிறிது என்றான்

(87)

இந்தப் பாடலில் உள்ள 'தூயையும் ஆதி உலகத்தே பிறந்தாய் ஆதி' என்னும் பகுதி, குறிப்பாக,