பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 சுந்தர சண்முகனார்

வலியனோ?

தன்னை வணங்கிய பரதனை நோக்கி, நம் தந்தை வலிமையுடன்- நலமுடன் உள்ளாரா என இராமன் வினவினான்:

மல்உயர் தோளினான் வலியனோ என்றான் (56) என்பது பாடல் பகுதி. நலமோ என்னும் பொருளில் உள்ள வலியனோ' என்னும் சொல்லாட்சியில் புதுமை பூத்துள்ளது.

இவ்வாறு இன்னும் பல முத்தான சொல்லாட்சி களையும் சொற்றொடர் ஆட்சி முத்துகளையும் கம்பர் தம் நூலில் பெய்து, கற்போரின் உள்ளங் கவர்ந்துள்ளார்.