பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 139

ஆழி சூழ் உலக மெல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற் கொண்டு
பூழிவெங் கானம் கண்ணிப் புண்ணியப் புனல்கள் ஆடி
ஏழிரண் டாண்டின்வா என்று இயம்பினன் அரசன் என்றாள்

(111)

மன்னன் இராமனைக் காட்டிற்கு அனுப்பவேண்டா என்று எவ்வளவு மன்றாடியும் கேளாமல் அவனை வலிய ஒத்துக் கொள்ளச் செய்த கைகேயி அரசன் ஆணை யிட்டது போலவும், தன் மேல் பழி இல்லாதது போலவும் (குடும்பங்களில் பெண்கள் சிலர் கூறுவது போல்) கூறினாள். இப்பாடலில் நீ போய்... வா' என்ற சொல் அமைப்பு இருப்பது சுவையாயிருக்கிறது. (சுவை இராமனுக்கு அன்று; பாடலைப் படிப்பவர்க்கு)

இன்றே போகின்றேன்

காட்டுக்குத் துரத்துகின்ற கைகேயியிடம் இராமன் கூறுகிறான்: அன்னையே! மன்னவன் கட்டளையிடா விடினும் காட்டிற்கு ஏகுமாறு நீங்கள் பணித்தால் தான் மறுப்பேனோ? மறுக்க மாட்டேனே. என் பின்னவனாகிய (தம்பியாகிய) பரதன் அரசச் செல்வம் பெற்றதை யான் பெற்றதாகவே கருதி மகிழ்கிறேன். தம்பிக்கு நாடு தந்து யான் காடு சென்று தவம் புரியும் இந்த வாய்ப்பினும்வேறு நல்ல வாய்ப்பு இருக்க முடியுமா? இந்த நல்ல பணியைத் தலைமேல் கொள்கின்றேன். காட்டிற்கு இன்றே இப்பொழுதே போகிறேன்; விடையும் பெற்றுக் கொண்டேன்- என்று கூறுகிறான்.

மன்னவன் பணியன்றாகின் நும்பணி மறுப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ
என் இனி உறுதி அப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்

(114)

இராமனது உயரிய பண்பாட்டின் எவரெஸ்ட் கொடுமுடியை அறிவிக்கும் பாடலாகும் இது. இப்படியும்