பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அயோத்தியா காண்ட ஆழ் கடல் ) 143 அரசையும் கொள்ளக் கொள்ளக் குறையாத பல்வேறு செல்வங்களையும் இன்ன பிறவற்றையும் இராமன் கைகேயிக்குக் கொடுத்துவிட்டு பெரும் புகழ் பெற்ற அவனது வள்ளல் தன்மை என் உயிரை மாய்க்கப் பார்க்கிறதே! அள்ளல் பள்ளப் புனல்சூழ் அகல் மாநிலமும் அரசும் கொள்ளக் குறையா நிதியின் குவையும் முதலா எவையும் கள்ளக் கைகேசிக்கே உதவிப் புகழ்கைக் கொண்ட வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான் (6.1) ஒருவர்க்கு ஒன்று உதவுவதே மற்ற புகழ்ச் செயல் களினும் பெரிய புகழ்ச் செயலாகும். உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் (232). ஈபவரின் புகழையே உலகம் உயர்த்திப் பேசும் என்னும் கருத்துடைய இந்தக் குறட்பா ஈண்டு எண்ணத் தக்கது. அதே நேரத்தில், புகழ் பெற்ற வள்ளல் தன்மை இன்னொருவரின் உயிரை மாய்ப்பது வருந்தத்தக்கது. இந்தச் செயலைத் தயரதனின் உரை வியக்கும்படி அறிவிக்கிறது. ஒரு சொல் விளையாட்டு ஜனகன் மகள் ஜானகி என்பது போல், கேகயன் மகள் கைகேயி. இந்தக் கைகேயி என்பது கைகேசி என இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே ஒரு சொல் விளையாட்டு நினைவைத் தூண்டுகிறது. கரிசலாங் கண்ணிக்குப் பொற்றலைக் கையாந்தகரை" என்னும் பெயர் உண்டு. (பொற்றலை = பொன்தலை), கேசி என்பது தலை முடியைக் குறிக்கிறது. கையாந்தகரை என்பதில் 'கை' என்பது உள்ளது; எனவே, கை-கேசி= என்னும் இரண்டையும் இணைத்துக் கரிசலாங் கண்ணிக்குக் கைகேசி' என்னும் மறைமுகப் பெயரை