பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 - சுந்தர சண்முகனார்

திரும்பி வா; இல்லையேல், இராமனுக்கு முன் நீ முடிந்திட வேண்டும்.

ஆகாதது அன்றால் உனக்கு, அவ்வனம் இவ்வயோத்தி,
மாகாதல் இராமன் அம்மன்னன்; வையம் ஈந்தும் போகா உயிர்த் தாயர் நம்பூங் குழல்சீதை என்றே ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் என்றாள்

(146)

பின்னும் பகர்வாள் மகனே இவன்பின் செல்; தம்பி என்னும்படி அன்று, அடியாரின் ஏவல் செய்தி, மண்ணும் நகர்க்கே இவன் வந்திடின் வா! அது அன்றேல்
முன்னம் முடி என்றனள் வார்விழி சோர நின்றாள்

(147)


சான்று நீ

காடு செல்லாமல் முடிசூட்டிக் கொள் என்று வற்புறுத்திய வசிட்ட முனிவனை நோக்கி இராமன் சொல்கின்றான். என் தந்தை இரண்டு வரங்களையும் ஒத்துக் கொண்டு தந்துள்ளார்- ஈன்ற தாயாகிய கைகேயி அவ்வரங்களின்படிக் காடு செல்லச் சொன்னாள். யானும் அவர்களின் கட்டளையைத் தலைமேற் கொண்டேன் இவற்றையெல்லாம் உடனிருந்து அறிந்த நீ இதற்கு நல்ல சான்று ஆவாய். எனவே, சான்றாகிய நீயே என்னைத் தடுக்கலாமா- என்று இராமன் வசிட்டனை மடக்கினான்.

ஏன்றனன் எந்தை இவ்வரங்கள்; ஏவினாள் ஈன்றவள்; யான் அது சென்னி ஏந்தினேன்;
சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான் தோன்றிய கல்லறம் நிறுத்தத் தோன்றினான்

(164)

பிரிவினும் சுடுமோ?

உடன் வருவதாக வற்புறுத்திய சீதையை நோக்கி, மிகவும் வெப்பம் நிறைந்த காட்டு வழியில் உன் கால்கள் நடக்கமுடியாது என்ற இராமனை நோக்கிச் சீதை உரைக் கின்றாள்: என்னிடம் பரிவு இன்றி- மனத்திலே பற்று