பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 141

இன்றி என்னைத் தடுக்கின்றீர். உலகம் அழியும் ஊழிக் காலத்து ஞாயிறும் என்னைச் சுடமுடியாது; உமது பிரிவால் ஏற்படும் உள்ளத்து வெப்பத்தை விடக் காட்டு வழி வெப்பம் கொடியதோ- என்கிறாள்:

பரிவு இகந்த மனத்து ஒருபற்று இலாது
ஒருவு கின்றனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது ஈண்டுகின்
பிரிவினும் சுடுமோ பெருங் காடு என்றாள்

(222)


ஈண்டு குறுந்தொகைப் பாடல் ஒன்று ஒப்பு நோக்கத் தக்கது. தலைவியை உடன் கொண்டு செல்ல ஒவ்வாத தலைவன், பாழூர் போன்று தோற்றமளிக்கும் ஓமை மரங்கள் நிறைந்த பாலைவனத்தில் தலைவியால் நடக்க முடியாது என்ற தலைவனிடம் தோழி கூறுகின்றாள்: உம்மைப் பிரிந்து மனையிலே தனித்துக் கிடக்கும் துன்பத்தைவிட, காட்டுவழி துன்பம் தரத்தக்கதோ என்கிறாள். இதனைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றிய குறுந்தொகைப் பாடலால் அறியலாம்.

ஊர் பாழ்த்தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

(124)

என்பது அந்தப் பாடல். தலைவனைப் பிரிந்திருத்தலினும் கொடிய துன்பம் வேறில்லை என்னும் கருத்தால் இவ்விரு பாடல்களும் ஒத்துள்ளன.

இது ஒன்றுமோ

உடல் வரலாகாது என்று கூறிய இராமனை நோக்கி, குயில் மொழிச் சீதை சீறிக் கொதிக்கிறாள். ஐய! இப்போது புரிகிறது உம் எண்ணம். உமக்கு உள்ள துன்பம் எல்லாம் நான் உடனிருக்கும் ஒன்று மட்டுமே யாகும். என்னை விட்டுப் பிரிந்தபின் உமக்கு எல்லாம் இன்பமாகும் போலும்: