பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


150 ) சுந்தர சண்முகனார் மறுக்கக்கூடாது என்ற மதிப்போடு கூடிய அச்சத்தினாலே யாகும். அது போலவே, உன்னைக் காட்டிலும் பெரிய வனாகிய யான் சொல்கிறேன்- நீ என் ஆணையை மறுக்கலாமோ? சொன்னதைச் செய்! வருந்தாதேஎன்பது இராமனது திறமையான உரையாகும். மன்னவன் இருக்கவேயும் மணி அணி மகுடம் சூடுக என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி; அன்னது கினைந்தும் நீ என் ஆணையை மறுக்க லாமோ சொன்னது செய்தி ஐய! துயர் உழந்து அயரல் என்றான் (117) எனது ஆணை வசிட்ட முனிவனும் பரதனை நோக்கி அரசு ஏற்கும்படி நெருக்கி வற்புறுத்துகிறான். பரதனே! ஐம்பெருங் குரவர்கட்குள் உயர்ந்த குரவர், இம்மை நலனும் மறுமை நலமும் எய்தும்படிப் பலவிதக் கலை களையும் பயிற்று வித்தவரேயாவார். இதன்படி, யான், உன்னை மாணாக்கனாக ஏற்றுப் பல்வேறு கலைகளையும் பயிற்றுவித்த பெரிய குரவனாவேன். எனவே, என் சொல்லை நீ தட்டாமல்- என் ஆணையை ஏற்று, உனக்குரிய அரசை ஒப்புக்கொண்டு ஆண்டே தீர வேண்டும்- என வற்புறுத்தினான். இதஇயல் இயற்றிய குரவர் யாரினும் மத இயல் களிற்றினாய் மறுஇல் விஞ்சைகள் பதவிய இருமையும் பயக்கப் பண்பினால் உதவிய ஒருவனே உயரும் என்பரால் (123) என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள் ஒன்றலாதன பல உதவிற்று உண்மையால், அன்று எனாது, இன்று எனது ஆணை, ஐயநீ நன்று போந்து அளி உனக்கு உரியநாடு என்றான் (124) இவ்வாறு பலரும் எடுத்துரைக்க, அரசு ஏற்கப் பரதன் உடன்பட்டான்.