பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




7. சத்துருக்கனன் பங்கு


தயரதன் மைந்தர்கள் நால்வருள் சத்துருக்கனனைத் தவிர்த்த மற்ற மூவர்க்கே இராமாயணத்தில் நிறைந்த பங்கு உண்டு; சத்துருக்கனனுக்கு இரண்டோரிடத்தில் மட்டுமே உரை வாய்ப்பு தரப்பட்டுள்ளது- என்றெல்லாம் சத்துருக்கன் சொல்லப்படுகிறான். ஆனால், இந்த அயோத்தியா காண்டத்தில் சத்துருக்கனன் இடம் பெற்றுள்ள சில பகுதிகளைக் காண்போம்:


ஆறு செல் படலம்

நம்பி கூறல்

இராமனை அழைத்துவரப் படைகளுடன் செல்ல வேண்டும் என எண்ணிய பரதன், தன் தம்பி சத்துருக்கனனை அழைத்து, இராமனை அழைத்துவரப் படைகள் புறப்பட வேண்டும் என முரசறைந்து தெரிவிக்க ஏற்பாடு செய்க என்றான் பரதன்.

பரதன் சொல்லியபடி நம்பி சத்துருக்கனன் படை புறப்பட முரசறையுங்கள் என்று அதற்கு உரியவரிடம் கூறினான். உயிர் நீத்த உடல் அமிழ்தத்தால் மீண்டும் உயிர்த்து எழுவதுபோல, இராமனை அழைத்து வரவேண்டும் என்னும் சொல்லாகிய அமிழ்தத்தைச்