அயோத்தியா காண்ட ஆழ் கடல் 159
புறுபவர்கள், துன்பம் வந்தபோது துவளுவது பொருந்தாது என்கிறான்.
- இன்பம் வந்துறும் எனின் இனியதாய் இடைத்
- துன்பம் வந்துறும் எனின் துறக்கல் ஆகுமோ? (28)
என்பது பாடல் பகுதி. இது, நன்மை வருங்கால் இன்பமாய் நுகர்பவர், தீமை வருங்கால் துன்புறுவது ஏன்? (இரண்டிற்கும் ஈடு கொடுக்கத்தானே வேண்டும்?) என்னும் கருத்துடைய
- நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
- அல்லல் படுவ தெவன் (379)
என்னும் திருக்குறளின் மறு பதிப்புபோல் உள்ளதல்லவா?
என்பு இலா உயிர்
கணவன் இறந்ததை அறிந்த கோசலை, கோடைக் காலத்தில் வெயில் சுடுகின்ற வேளையில் வந்து அகப்பட்டுக் கொண்ட எலும்பு இல்லாத புழு- பூச்சி முதலிய உயிர்கள் வெந்து விடுவதைப்போல், தன் உடலும் உள்ளமும் வெப்பம் அடைந்தாளாம்.
அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி...
வெயில் சுடுகோடை தன்னில் என்பிலா உயிரின் வேவாள் (14)
என்பது பாடல் பகுதி. இது,
- என்பி லதனை வெயில்போலக் காயுமே
- அன்பி லதனை அறம் (77)
என்னும் திருக்குறளை நினைவுபடுத்துகிறது அன்றோ!
இனிய சொல்
இராமன் சீதைக்குச் சித்திர கூடத்தின் சிறப்பைக் காண்பித்துக் கொண்டு செல்கிறான். துளைகள்