பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 177

 போது சந்திரன் சிவனிடம் அடைக்கலம் புகுந்தானாம். சிவன் முற்றாத அந்த ஒற்றைக் கலைப் பிறைச் சந்திரனை எடுத்துத் தலையில் சூடிக் கொண்டாராம். மேலும், நீ ஒவ்வொரு கலையாய் வளர்ந்து மீண்டும் முழுமை பெறுவாய்; பின்னர், தக்கன் கெடுமொழிப்படி ஒவ்வொன்றாய்க் குறைவாய். மீண்டும் ஒவ்வொன்றாய் வளர்வாய் என்று அருளினாராம். இதுதான் சிவன் பிறை சூடிய கதை:

முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான் (132)

சுமந்திரன் மீட்சிப் படலம்

புரந்தரன் உரு

இந்திரன் கெளதம முனிவரின் மனைவியாகிய அகலிகையை, முனிவர் போல் கோலம் கொண்டு வஞ்சகமாய்ப் புணர்ந்ததனால், முனிவர் சினந்து, நீ விரும்பிய அந்தப் பெண் உறுப்பு உன் உடம்பு முழுவதும் உண்டாகுவதாக என்று கெடுமொழி (சாபம்) இட்டார். அவ்வாறே உடம்பு ஆயிற்று. மற்றவர் கண்கட்கு மட்டும் அவை கண்கள்போல் தெரியும்படி வரம் வேண்டிப் பெற்றான். இக்காலத்தில் மக்களுக்குக் கண்ணாயிரம் என்னும் பெயர் வைக்கப்படுகிறது. அது இந்திரனைக் குறிக்கும் பெயர். ஞாயிறு மறைய இருள் தோன்றியது. அப்போது, வானத்தில் விண்மீன்கள் பல மின்னின. அப்போது வானம், உடம்பு முழுதும் கண்கள் பெற்ற இந்திரனது தோற்றம் போல் இருந்ததாம். இராமன் காட்டில் இருந்தபோது, ஞாயிறின் மறைவும் இரவின் வருகையும் ஒரு நாள் நிகழ்ந்தது இவ்வாறு புனையப் பட்டுள்ளது. பாடல்:

பரந்து மீன் அரும்பிய பசலை வானகம்
அரந்தை இல் முனிவரன் அறைந்த சாபத்தால்

அ. ஆ.-12