பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182 சுந்தர சண்முகனார்


இப்பாடலில் அழகு நறவாகவும் கண்ணும் உள்ளமும் வண்டாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

பூத்தன தாமரை மலர்கள்

இராமன் தேரேறித் தெருவில் சென்ற போது, சில பெண்கள் வீட்டு வாயிலில் தூணைப் பிடித்துக் கொண்டும், சில பெண்கள் மாடியில் நிலாமுற்றத்தில் நின்று கொண்டும், சிலர் காலதருக்குள் (சன்னல்களுக்குள்) நின்று கொண்டும் இராமனைக் கண்டனராம்:

நீள் எழுத்தொடர் வாயிலில், குழையொடு நெகிழ்ந்த ஆளகத்தினொடு அரமியத் தலத்தினும் அலர்ந்த, வாள் அரத்த வேல் வண்டொடு கெண்டைகள் மயங்கச்
சாளரத்தினும் பூத்தன தாமரை மலர்கள்

(53)

இப்பாடலில் பெண்களின் முகங்கள் தாமரை மலர்க ளாக உருவகிக்கப்பட்டுள்ளன. பெண்கள் வாயிலில் துணைப் பிடித்துக் கொண்டு நின்று பார்ப்பது உண்டு. மாடியிலிருந்து கொண்டும், சாளர வழியாகவும் பார்ப்பது உண்டு. அங்கெல்லாம் (முகங்களாகிய) தாமரை மலர்கள் பூத்தன என்பது கூறப்பட்டுள்ளது. வாயிலில் காதணியோடும் மாடியில் கூந்தலோடும் தாமரைகள் (முகங்கள்) இருந்தனவாம். சாளரத்தில் பூத்த (முகமாகிய) தாமரை மலரில் வாள், வேல், வண்டு, கெண்டை மீன் ஆகியவை கலந்திருந்தனவாம். வாளும் வேலும் வண்டும் மீனும் போன்ற கண்கள் முகத்தில் இருப்பதை, தாமரையில் இந்த நான்கும் கலந்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. கண்கள் இந்த நான்கு பொருள்களாக உருவகிக்கப்பட்டுள்ளன.

கூண்டோடு கைலாசம்

தயரதன் இராமனுக்கு முடிசூட்டு என்று சொல்லிய சொல்லாகிய மதுவை அவையோர் அருந்தினராம். மேலும், மகிழ்ச்சி மிகுதியால் மெய்ம்மயிர் சிலிர்க்க,