பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அயோத்தியா காண்ட ஆழ் கடல் ) 189 கருவறையின் இடப்பக்கத்தே திருமாலின் கருவறை இருப்பதை- அதாவது- திருமால் கருவறையின் வலப் பக்கத்தே சிவன் கருவறையும் இருப்பதைக் காணலாம். மக்களுள் சிலருக்குச் சங்கரநாராயணன்' என்னும் பெயர் வழங்கப்படுவதைக் காணலாம். நின்றனர் இராமனுக்குக் காடு என்பதை அறிந்த பெண்கள் சிலர்,இரும்பு போன்ற மனத்தினராயும் பெரும் பொருளை இழந்தவர் போலவும் அப்படியே நின்றிருந்தனர்! இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார் (170) உலகியலில், இன்றியமையாப் பொருளை இழந்தவர் சிலர், மனத்தை இரும்பாக்கிக் கொண்டு, ஒன்றும் புரியாமல்- செய்வதறியாமல் அப்படியே நின்றிருப் பதைக் காணலாம். சுமந்திரன் மீட்சிப் படலம் சிந்தையின் இருண்டது ஞாயிறு மறைந்ததும், மந்தரையின் உரையால் மாறிய கைகேயியின் மங்கிய மனம்போல் வானில் இருள் வந்ததாம். அந்தியில் வெயில்ஒளி அழிய வானகம் நந்தலில் கேகயன் பயந்த கங்கைதன் மந்தரை உரையெனும் கடுவின் மட்கிய சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே (5) பகலில் வானம் வெளிச்சமாயிருந்ததைப் போன்று களங்கமின்றி வெள்ளையாயிருந்த கைகேயியின் மனம், இருள் வந்ததும் வானம் கருமையானதுபோல், கூனியின் வஞ்சக உரையினால் கைகேயியின் மனம் இருண்டது.