பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 195



வீடுதோறிரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

என்னும் திருவருட்பாப் பாடல் பகுதி ஒப்பு நோக்கத் தக்கது.

ஆறு செல் படலம்

அரசிலா வையகம்

அரசை ஏற்க மறுக்கும் பரதனுக்கு வசிட்ட முனிவர் கூறுகின்றார்: அரசர் இல்லாத நாடு, ஞாயிறு இல்லாத பகல் போலவும் திங்கள் இல்லாத இரவு போலவும் உயிர் இல்லாத உடம்பு போலவும் பொலிவு இன்றி மங்கிப் போகும்:

வள்ளுறு வயிரவாள் அரசு இவ்வையகம்
கள்ளுறு கதிர் இலாப் பகலும், நாளொடும் தெள்ளுறு மதியிலா இரவும், தேர்தரின்
உள்ளுறை உயிரிலா உடலும் ஒக்குமே

(7)

நான்கு கடல்கள்

பரதனுடன் நால்வகைப் படைகளும் புறப்பட்டன. ஒவ்வொருவகைப் படையும் ஒவ்வொருவகைக் கடலாக உருவகிக்கப்பட்டுள்ளது. ஒரு கடல் தேர்களின் மேலும், இன்னொரு கடல் யானைகளின் மீதும், மற்றொரு கடல் குதிரைகள் மீதும் வேறொரு கடல் தரைமேல் பரவியும் சென்றனவாம்.

தேர்மிசைச் சென்றது ஓர் பரவை, செம்முகக் கார்மிசைச் சென்றது ஓர் உவரி, கார்க்கடல் ஏர்முகப் பரிமிசை ஏகிற்று, எங்கணும்
பார்மிசைப் படர்ந்தது பதாதிப் பெளவமே

(32)

தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாள்படை ஆகிய நான்கும் கடலாக உருவகிக்கப்