பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 209


ஒலிப்பது போல் ஒலி எழுப்புகின்றன. இதைக் கம்பர், கைகேயியை மனத்துள் நினைத்துக் கொண்டு அவளை வைவது போல் இருக்கிறதாகத் தற்குறிப்பேற்றம் செய்துள்ளார்:

தோய் கயத்தும் மரத்தும் மென்சிறை துள்ளி மீது எழு புள் எலாம்
தேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ
கேகயத் தரசன் பயந்த விடத்தை இன்னதொர் கேடு சூழ்
மாகயத் தியை உள்கொதித்து மனத்து வைவன போன்றவே

(52)

சிவந்தனன்

கதிரவன், கைகேயியின் செயலால் மிகவும் சினந்து முகம் சிவந்தவன்போல் கிழக்கு மலையில் தோன்றினான்- இயற்கையான செந்நிறத்துடன் தோன்றினான். 'செஞ் ஞாயிறு' எனல் மரபு. ஆனால், கைகேயிமேல் சினங் கொண்டே முகம் சிவந்து தோன்றினான் எனத் தற்குறிப் பேற்றம் செய்யப்பட்டுள்ளது:

பாபம் முற்றிய பேதை செய்த பகைத் திறத்தினில் வெய்யவன்
கோபம் முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன் குணக் குன்றிலே

(65) *

கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள் என்பது தொல்காப்பிய நூற்பா. எனவே, கதிரவனின் சிவப்பு சினக் குறிப்பாயிற்று.

தயரதன் மோட்சப் படலம்

யானே காப்பேன்

இராமனை அழைக்கப் பரதனுடன் வந்த மக்கள் காட்டில் ஒருநாள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்கள் அறியாமல் இராமன் வேறிடத்திற்குச் சென்று விட்டான். பொழுது விடிந்ததும் கதிரவன் தோன்றினான். இங்கே கம்பர் கதிரவன் தோற்றத்தை ___________________________________________________

  • தொல்காப்பியம்- உரியியல்-76.

அ. ஆ.-14