பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210 - சுந்தர சண்முகனார்


(சூரியோதயத்தை) அணிந்துரைக்கிறார். கதிரவன், தன் மகன் தயரதன் இறந்து விட்டான்; அவன் மக்களும் காட்டிற்குச் சென்று விட்டனர்; அவர்கள் நாடு திரும்பி ஆட்சி ஏற்கும் வரையும் நானே காப்பேன் என்று எண்ணி வந்தவன் போல் வந்தானாம். கடல் ஒளியாகிய முரசு ஒலிக்க, தேவர்கள் துதிக்க, மண்ணுலகோர் வணங்க, ஒளியாகிய வாள் பக்கத்தில் விளங்க, ஒளி பொருந்திய தன் ஒற்றை ஆழித்தேரில் ஏறிக் கதிரவன் வந்தானாம்:

மீன்நீர் வேலை முரசு இயம்ப, விண்ணோர் ஏத்த, மண் இறைஞ்ச
தூநீர் ஒளிவாள் புடை இலங்கச் சுடர்த்தேர் ஏறித் தோன்றினான்
வானே புக்கான் அரும் புதல்வன்; மக்கள் அகன்றார்; வரும் அளவும்
யானே காப்பென் இவ் வுலகை என்பான் போல எறி கதிரோன்

(30)

இராமன் சூரிய குலத்தவனாம். இக்குலத்தாரின் தோற்றம் கதிரவனிலிருந்து தொடங்குகிறது. அதனால் தான், தயரதனை மகன் முறையாக்கி 'வானே புக்கான் அரும்புதல்வன்' என்பது கூறப்பட்டது. இந்தக் காலத்திலுங்கூட, ஒரு நாட்டின் அரசுத் தலைவரோ அல்லது தலைமை அமைச்சரே இறந்து விடின் அல்லது நீங்கிவிடின், நிலையான அடுத்தவர் வரும் வரையும் ஒருவர் இடைக்கால அரசுப் பொறுப்பாளராய் இருப்பது வழக்கம். அதே போல், கதிரவன் தன் குலத்தின் இடைக் காலத் தலைவனாய் வந்தவன் போல் உள்ளான் எனத் தற்குறிப்பேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரு பொருள் அணி

மற்றும் இப்பாடலில் இரண்டு பேருக்கும் பொருந்துமாறு இரு பொருள் (சிலேடை) அணி அமைக்கப் பட்டுள்ளது. அரசர் பதவிக்கு வரும்போது முரசம் முழங்கும்- கதிரவனுக்கும் கடல் ஒலியாகிய முரசம் முழங்குகிறதாம். தயரதன், இராமன் முதலியோர்வரின் தேவரும் மண்ணுலகத்தவரும் ஏத்தித் தொழுவர்