பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214 - சுந்தர சண்முகனார்


கொண்டிருந்ததாம். முடியுடன் வருவான் என்று உள்ளம் தழைத்தாளாம் கோசலை- ஆனால், அவள்முன், கவரியோ- குடையோ- முடியோ- ஒன்றும் இன்றித் தனியனாகச் சென்றானாம். தமியன் = தனியன். கவரி மாறி மாறி மேலேற்றியும் கீழ் இறக்கியும் வீசப்படுவதைக் குறிக்கக் 'குழைக்கின்ற' என்ற சொல்லைக் கம்பர் ஆண்டிருப்பது சுவையாயுள்ளது. மழைக் குன்றம்' என்பது, இராமனின் கருமை பூத்த தோற்றத்தையும் வள்ளன்மையையும் அறிவிக்கின்றது.

அரசே அரசே ?

மயங்கிக் கிடக்கும் மன்னனைக் கண்டு கோசலை புலம்புகிறாள்: பிரியாத இராமனைப் பிரிவது எவ்வாறு? பெரியோய்! இது தகுதியா- முறையா? அடியேங்களின் எளிய நிலையை நினைத்துப் பார்க்காதது ஏன்? வறியவர் கட்குச் செல்வமாயிருந்தாயே! தமியேங்கட்கு வலிமையா யிருந்தாயே! இச் செயலை நீ உன் அறிவு கொண்டுதான் செய்தாயா? அல்லது இது யாருடைய சூழ்ச்சிச் செயலா யிருக்குமா? அரசே- அரசே! என்று புலம்பினாள்:

பிறியார் பிரிவு ஏது என்னும், பெரியோய் தகவோ என்னும்,
நெறியோ, அடியேம் நிலை நீ நினையா நினைவு ஏதுஎன்னும்,
வறியோர் தனமே என்னும், தமியேன் வலியே என்னும்,
அறிவோ வினையோ என்னும், அரசே அரசே என்னும்

(30)

இந்தப் பாடல் மிகவும் இரக்கத்தைக் கொப்புளிக் கிறது.

தழுவிக் கொள வா

தயரதன் மகனைப் பிரிந்து உயிர் துறக்க நேரிடுவதற்கு உரிய காரணமாக, முன்னர்த் தான் பெற்ற ஒரு கெடுமொழியை (சாபத்தை) விவரிக்கிறான்:

நான் யானை வேட்டைக்காகக் காடு சென்றிருந்த போது, ஒரு தடாகத்தின் கரையில் யானை நீர் அருந்தும்