பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216 - சுந்தர சண்முகனார்


உங்கள் மகனுக்குப் பதிலாக யான் என்ன செய்ய வேண்டுமெனினும் செய்வேன்- என்னைப் பொறுத்தருள்க என்று கெஞ்சினேன். அவர்கள் எனக்கு அப்போது இறப்பு நேரும்படிக் கெடுமொழி (சாபம்) இடாமல், நீ இறுதியில் எங்களைப் போலவே மகனைப் பிரிந்து இறப்பாய் என்று கெடுமொழி இட்டனர். அந்தக் கெடுமொழி இப்போது பலிக்கத் தொடங்கியுள்ளது- என்று விவரித் தான். அந்தப் பெரியவர்கள், மகன் வந்து விட்டான் என அறிந்து கூறியதாக உள்ள பாடல் இவண் வருமாறு:

மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்.பால் மகனோடு
அந்தண் புனல்கொண்டு அணுக, ஐயா இப்போ தளவாய்
வந்திங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தோம்
சந்தம் கமழும் தோளாய் தழுவிக் கொள வா எனவே

(79)

என்பது பாடல். அடுத்து, செய்தியறிந்த அந்தப் பெரியவர்களின் நிலையைக் காணலாம். அவர்கள் அயர்ந்தனர். மகன்மீது விழுந்து புரண்டனர்- எங்கட்கு இப்பொழுது தான் உண்மையிலேயே விழிகள் போயின என்றனர். துன்பக் கடலுள் ஆழ்ந்தார்கள்- ஐயா ஐயா என்று அழைத்து அலறினார்கள்- எங்கள் நெஞ்சைப் பிளந்தனையே என்றனர். பொன்னுலகில் (மேலுலகில்) நீ மட்டும் சென்று வாழ்வதா? இனி நாங்கள் இங்கே இருக்க மாட்டோம்- இதோ நாங்களும் வந்து விட்டோம்- வந்து விட்டோம்- என்று புலம்பினர்:

வீழ்ந்தார் அயர்ந்தார் புரண்டார் விழிபோயிற்று இன்று என்றார்,
ஆழ்ந்தார் துன்பக் கடலுள், ஐயா ஐயா என்றார், போழ்ந்தாய் நெஞ்சை என்றார், பொன்னாடதனில் போய்நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம், வந்தேம் வந்தேம் இனியே

(83)

குகப் பலடம்

என் கிளை

இராமனுடன் தானும் தொடர்ந்து காட்டில் வரப் போவதாகக் கூறிய குகனுக்கு இராமன் கூறுகிறான்: