பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220 - சுந்தர சண்முகனார்


அழைத்துப் போக வந்துள்ளாய் என்பதை நினைக்கும் போது, புகழ் மிக்கவனே! ஒர் இராமர் அல்லர்- பத்து இராமர் அல்லர்- நூறு இராமர் அல்லர்- ஆயிரம் இராமர் கூட உனது பண்புக்கு ஒப்பாகார்- அம்மாடி! என்று கூறி இராமனைப் புகழ் மலையின் உச்சியில் நிறுத்தியுள்ளான்:

தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப் போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!

(35)

அழகிது அடிமை

இராமனுக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் இலக்குவன் உடனிருந்து செய்து கொண்டிருக்கின்றான் என்பதைக் கேட்டறிந்த பரதன் நொந்து கூறுகிறான்: இராமனுக்கு உள்ள- ஒத்த தன்மையுடைய தம்பியருள், யான் என்றும் இராமனுக்குத் துன்பம் வரும்படி யான நிலைமையை உண்டாக்கி விட்டேன். தம்பி இலக்குவனோ, என்னால் இராமனுக்கு ஏற்படும் துன்பங்களை எல்லாம் நீக்க உள்ளான்; அவனது அன்பிற்கு எல்லையே இல்லை. இந் நிலையில், இராமனுக்கு யான் செய்யக் கூடிய அடிமை (தொண்டு) மிகவும் அழகாயிருக்கிறது- என்று நொந்து கூறுகிறான்:

என்பத்தைக் கேட்ட மைந்தன், இராமனுக்கு இளையர் என்று
முன்பு ஒத்த தோற்றத்தோமில் யான் என்றும் முடிவு இலாத
துன்பத்துக்கு ஏது ஆனான்; அவன் அது துடைக்க நின்றான்;
அன்பத்துக்கு எல்லை உண்டோ! அழகிது என் அடிமை! என்றான்

(43)

எதுகைக்காக 'என்பதை' என்பது 'என்பத்தை' என்றும், 'அன்பதுக்கு' என்பது 'அன்பத்துக்கு' என்றும் 'த் மிக்கு வந்தது. ஒருவர் ஒழுங்கற்ற முறையில் இயங்கிய போது, அவரை மற்றொருவர் பார்த்து 'நீ செய்வது